கம்பராமாயணம் 1123 · பால 18.21

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெடுந்தாதை முன் போன பேர் இருவர் தம் புடை - (பெருமைக்குணம்) மிக்க தம் தந்தையான தசரதனது எதிரிற் சென்று பெருமைக்குரிய (இராம, இலக்குவர்) இருவரின் பக்கத்திலே; தானை ஏர் சனகன் ஏவலில் வரும் படையின் - படைக்குரிய அழகினையுடைய சனகனின் ஏவலினால் உடன் வரும், சேனையில்; யானையோ, பிடிகளோ, இரதமோ, இவுளியோ - (ஆண்) யானைகளோ? பெண் யானைகளோ? தேர்களோ? குதிரைகளோ? (இவற்றுள் எவையோ மிகுந்தவை); ஆனபேர் உறைஇலா நிறைவை யார் அறிகுவார்? - பெரிய எண்களை எண்ணுவதற்கான உறையென்னும் குறிப்பிலக்கம் இட்டும் எண்ணமுடியாத (அந்த யானை முதலியவற்றின்) நிறைவினை அறிந்து கூறவல்லவர் யாவருளர்?

உறை - ஓர் இலக்கக் குறிப்பு. பொருள்களை எண்ணும் காலத்து ஒவ்வொரு பெரிய எண்ணுக்கும் கழற்சிக்காய் குன்றிமணிகளை ஒவ்வொரு விழுக்காடு வைக்கும் சிறு குறியீடு. “உறைபோடக் காணாது” என்னும் வழக்கம் காண்க. “ஒழிந்த பேர் உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா” (கம்ப. 4808); “அம்பண அளவை உறை குறித்தாங்கு” (பதிற். 11:5); “இவ்வரக்கர்...... உறையிடவும் போதார்” (கம்ப. 5344) எனவருவனவும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tuskers, or cow-elephants, or chariots, or horses:
  2. who could know the fullness of them, past all counting by tally-marks,
  3. in the army that, at the bidding of Caṉakaṉ, lord of a splendid host,
  4. came at the side of the two great ones who had gone out to meet their noble father?

What the poem says

The escort Caṉakaṉ has sent with Irāmaṉ and Ilakkuvaṉ is beyond counting. One cannot even say which kind of force was most numerous, elephants, chariots or horses.

The word translated “tally-marks” refers to an old method of counting large numbers, in which a seed or bead was set aside as a marker for each large unit. Here even that method would not suffice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṉaiyō piṭikaḷō iratamō ivuḷiyō,
āṉa pēr uṟai ilā niṟaivai yār aṟikuvār?
tāṉai ēr caṉakaṉ ēvaliṉ, neṭun tātai muṉ,
pōṉa pēr iruvartam puṭai varum paṭaiyiṉē.