கம்பராமாயணம் 1126 · பால 18.24

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

களைவு அருந்துயர் அறக் ககனம் எண்திசை எலாம் - (பிறரால்) நீக்குதற்கு அரிய (சம்பரன் முதலிய அசுரர்களால் உலகோர்க்கு நேர்ந்த) துயரங்களையெல்லாம், நீக்கியதால் விண்ணிலும் எண்திசைகளிலும், பிறஎல்லா இடங்களிலும்; விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் - பரவிய புகழினையுடையவனும், எல்லோரினும் சிறந்தவனுமான தசரதன்; இளைய பைங்குரிசில் வந்து அடிபணிந்து எழுதலும் - பசும்பொன்னின் நிறம் வாய்ந்த இளைய பெருமாள் வந்து (தன்னுடைய) திருவடிகளை வணங்கி எழுந்த அளவிலே; தளைவரும் தொடையல் மார்புற உறத்தழுவினான் - கட்டப்பட்ட மாலைகள் நிறையும் மார்பில் பொருந்துமாறு, நன்கு அணைத்துக்கொண்டான்.

இராமனாகிய மூத்தோனைக் காக்கத் தானாகப் பின்சென்ற தகுதியோன் ஆதலால், இலக்குவனை “மார்புற, உறத்தழுவினான்” என்க. தசரதன், “துனி இன்றி உயிர் செல்ல, சுடர்ஆழிப்படை வெய்யோன் பனி வென்றபடி என்ன, பகைவென்று படி காப்போன்” (கம்ப. 650) ஆதலால், “களைவரும் துயர் அறக் ககனம் எண்திசை எலாம் விளைதரும் புகழினான்” என்றார். பரம்பொருளாகிய இராமனை ஈன்றதால் “எவரினும் புகழினோன்” ஆனான். இலக்குவன் பொன்னிறத்தன் என்பதனை, “வில் ஏந்தும் எனில் செம்பொன் பருவரை” (கம்ப. 058) என்பதனால் உணர்க. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் (திருக். 550) ஆதலால் “களைவரும் துயர் அற” நாடாண்டான் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the fresh young prince came, bowed at his feet and rose,
  2. he pressed him close to his chest, where the bound garlands hung, and held him tight:
  3. he whose fame, for ending sorrows hard to remove, grows through the sky
  4. and all eight directions, he who stands above everyone.

What the poem says

Next Ilakkuvaṉ, golden-complexioned, bows at his father's feet, and Tacarataṉ embraces him warmly too, since this son had of his own accord followed his elder brother to protect him.

Tacarataṉ's fame fills the sky and every quarter because he removed the world's hardest troubles, such as the demons he had fought for the gods. He is above everyone because he fathered Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḷaiya paiṅ kuricil vantu aṭi paṇintu eḻutalum,
taḷai varum toṭaiyal mārpu uṟa, uṟat taḻuviṉāṉ;
kaḷaivu arun tuyar aṟak, kakaṉam eṇ ticai elām
viḷaitarum pukaḻiṉāṉ, evariṉum mikutiyāṉ.