கம்பராமாயணம் 1128 · பால 18.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன்னு பேர்அன்பு மிக்கு ஒழுகி ஒத்து - (எப்போதும் இராமனையே) நினைக்கும் தன்மையுள்ள சிறந்த அன்பு (மனத்திலே) மிகுந்து, (அங்கு அடங்காமல்) கண் வழியாகச் சிந்தியது போன்று; ஒண்கண்நீர் பன்னு தாரைகள் தர - ஒளிபொருந்தும் கண்களில் நீர் அடர்ந்து தாரை தாரையாகப் பெருக; தொழுது எழும் பரதனை - (தன்னை) வணங்கி எழுகின்ற (தம்பி) பரதனை; தன்னை அத்தாதை முன் தழுவினான் என - இராமன் தன்னைத் தந்தை தசரதன் முன் தழுவியது போலவே; பொன்னின் மார்புஉற அணைத்து உயிர்உறப் புல்லினான் - பொன்போன்ற தன்மார்பிலே அழுந்த அணைத்துக்கொண்டு உயிரும் உயிரும் பொருந்துமாறு தழுவினான் (இராமன்).
அறம் வளர்க்கும் கண்ணாளராகிய இருவர் உயிரும் ஒன்று என்பது தோன்ற “உயிர் உறப்புல்லினான்” என்றார். அன்பு தாழ் உடைத்து வெளிப் படும் தன்மையது (திருக். 71) ஆதலால், பரதனின் கண்ணீரை, “உன்னுபேர் அன்புமிக்கு ஒழுகிஒத்து” என்றார். “தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும் பள்ளமெனும் தகையாள் பரதன் எனும் பெயரான்” (கம்ப. 657) ஆதலால், பரதனைத் தனித்துக் கூறினார். “எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்இருந்த வள்ளலையே அனையான்” (கம்ப. 657) எனப்படுபவன் பரதன் ஆதலின், “தன்னை அத்தாதை முன் தழுவினான்” எனப் புல்லினான் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As a great love, ever dwelling on him, overflowed and streamed out,
- Paratan, his bright eyes pouring tears in rope after rope, bowed and rose;
- and he drew him close to his golden breast and held him, life to life,
- just as his father had embraced him a moment before.
What the poem says
Now it is Paratan's turn. His love for Irāmaṉ is so great that it overflows as tears streaming from his eyes as he bows. Irāmaṉ embraces him exactly as their father had just embraced Irāmaṉ, so tightly that their two lives seem to become one.
The poet singles out Paratan here because elsewhere he describes him as the very channel into which all righteousness flows, and as matching Irāmaṉ himself in virtue and beauty.