கம்பராமாயணம் 1132 · பால 18.30

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரிகளைப் பொருவினார் - யானைகளைப் போன்ற அப்படை வீரர்களுடைய; காதலோ அறிகிலம் - (அரச குமாரர்களிடத்து வைத்துள்ள) அன்பின் மிகுதியோ (இவ்வளவென்று) எம்மால் அறியமுடியாததாய் உள்ளது; தீது இலா உவகையும் சிறிதரோ? பெரிதரோ? - (அவர்கட்கு அப்போது உண்டான) மாசற்ற மகிழ்ச்சிப் பெருக்கு குறுகிய காலத்ததா? நீண்ட காலத்ததா? (அறியோம்.); கோதை சூழ் குஞ்சிக் குமரர் வந்து எய்தலும் - மாலைகளைச் சூடிய மயிர் முடியோடு காணப்பெறும் அரசகுமாரர்கள் வந்து அடைந்த அளவிலே; அத்தானையின் தன்மை தாதை யோடு ஒத்தது - அந்தப் படையின் இயல்பு (இராம இலக்குவர்களைக் கண்ட) தந்தையாகிய தசரதன் இயல்போடு சமமாகியது.

அரோ - அசைகள். “தாதையோடு ஒத்தது” என்றதனால், தசரதன் அடைந்த பேருவகையினைப் படைகளும் அடைந்தன என்றார். எனவே, இராம இலக்குவர் அத்தனை பேர்க்கும் மக்களாயினர்; அத்தனை பேரும் இராம இலக்குவர்க்குத் தந்தையர் ஆயினர் என்பது கருத்தாகக் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their love we cannot measure, those men like elephants;
  2. and their flawless joy, was it small, was it great?
  3. When those princes with garlands wound about their hair arrived,
  4. the state of that army became the same as their father's.

What the poem says

When the princes reached the soldiers, the army's love and joy were beyond measuring: the whole host felt exactly what Tacarataṉ had felt on seeing his sons again.

The commentary draws out the implication: every soldier rejoiced like a father, as if Irāmaṉ and Ilakkuvaṉ were the sons of each one of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kātalō aṟikilam, karikaḷaip poruviṉār
tītu ilā uvakaiyum ciṟitu arō, peritu arō,
kōtai cūḻ kuñci ak kumarar vantu eytalum,
tātaiyōṭu ottatu at tāṉaiyiṉ taṉmaiyē.