கம்பராமாயணம் 1133 · பால 18.31

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து,
அழிவு இல் சிந்தையின் உகந்து ஆடல் மா மிசை வரத்,
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து,
எழுத அரும் தகையது ஓர் தேரின் மேல் ஏகினான்.

பொருள் · Meaning in Tamil

இரண்டு அருகும் அன்புடைய தம்பியர் தொழுது தொடர்ந்து - (தனது) இருமருங்கிலும் அன்புடைய தம்பியர் மூவரும் வணங்கி தொடர்ந்து; அழிவில் சிந்தையின் உவந்து ஆடல் மா மிசை வர - (என்றும் தமையன் மாட்டு) நிலைத்த அன்புடைய மனத்திலே பெருமகிழ்ச்சி கொண்டவராய் வெற்றிக் குதிரைகளின்மேலே ஏறிவரவும்; தழுவு சங்குடன் நெடும்பணை தழங்கிட - (கைகளால்) தழுவி (வாயில்) வைத்து ஊதப்படுகிற பெரிய சங்கவாத்தியங்களுடன் பெரிய பேரிகைகள் முழங்கவும்; எழுந்து எழுதருந்தகையது ஓர் தேரின்மேல் ஏகினான் - (இராமபிரான்) புறப்பட்டு, ஓவியத்தாலும் எழுதுதற்கரிய அழகுடையதொரு தேரின்மேல் (ஏறிச்) சென்றான்.

இராமன் மாட்டுத் தம்பியர் வைத்துள்ள அழியா அன்பின் ஆழத்தையும் கனத்தையும் முதல் இரண்டடிகளிலும் சொல் ஓவியப்படுத்தியுள்ளமை காண்க. மெய்காப்பார் பணியினை இராமன் மாட்டுள்ள அன்பின் மிகுதியால் தம்பியரே ஏற்று, இருமருங்கும் புடைசூழவந்தனர் என்க. இத்தகைய பவனிக்கெனப் பயிற்றப் பட்ட ஆடும் பரிகள் இருந்தன என்பது, “ஆடல்மா மிசைவர” என்பதனால் பெற்றாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As his loving younger brothers, having bowed, followed on both sides,
  2. riding on dancing horses, glad with a love that never fades,
  3. and long war-drums thundered together with conches held to the lips,
  4. he set out and rode on a chariot of a beauty no painter could capture.

What the poem says

The procession sets off. Irāmaṉ rides in a chariot too beautiful to paint, with his three younger brothers riding on either side of him like a bodyguard, out of sheer love for him. Conches and great drums sound.

The “dancing horses” suggest steeds specially trained to prance in royal processions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toḻutu iraṇṭu arukum aṉpuṭaiya tampiyar toṭarntu,
aḻivu il cintaiyiṉ uvantu āṭal māmicai vara,
taḻuvu caṅkuṭaṉ neṭum paṇai taḻaṅkiṭa eḻuntu,
eḻuta arun takaiyatu ōr tēriṉmēl ēkiṉāṉ.