கம்பராமாயணம் 1134 · பால 18.32

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பஞ்சி சூழ் மெல் அடிப் பாவைமார் பண்ணையின்,
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து, இடை விராய்,
நஞ்சு சூழ் விழிகள், பூ மழையின் மேல் விழ, நடந்து,
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான்.

பொருள் · Meaning in Tamil

பஞ்சி சூழ்மெல்லடிப் பாவைமார் பண்ணை - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட மென்மையான பாதங்களையுடைய சித்திரப் பாவையினையொத்த மகளிரின் கூட்டம்; சூழ் மஞ்சுசூழ்நெடிய மாளிகையின் வந்து இடைவிராய் - (வானில்) சுற்றியுள்ள மேகங்கள், நீண்ட மாளிகையில் வந்து தங்குமாறு உயர்ந்த (மாடங்களையுடைய) மாளிகைகளிலிருந்து (வெளி) யிடங்களில் வந்து (மகளிரோடு மகளிர்) கலந்து நிற்க; நஞ்சுசூழ் விழிகள் - நஞ்சு போன்ற அவர்களின் கண்கள்; பூமழையின் மேல்விழ நடந்து - மலர் மாரிபோல் (தன்) மேலே விழும்படி, சென்று; இஞ்சிசூழ் மிதிலைமா வீதி சென்று எய்தினான் - மதில்கள் சூழ்ந்த மிதிலை நகரின் பெரிய வீதிகளை (இராமன்) அடைந்தான்.

நஞ்சும் மலராக்க வல்ல நாயகன் இராமன் என்க. மகளிர், கண் அம்பு மழையோடு, அவர் சொரிந்த கடிமலர் மழையும் இராமன்மேல் இடையீடின்றி வீழ்ந்தன என்க. உயர்குடி மகளிராதலின், வீதிக்கு வாராமல் மாளிகை மேலிருந்து மலர்மழையும், விழிவீச்சு மழையும் பெய்தனர் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As throngs of doll-like women, their soft feet reddened with lac,
  2. came out from the tall mansions wrapped in cloud and crowded in between,
  3. and their poison-laden eyes fell on him like a rain of flowers, he moved on
  4. and reached the great street of walled Mithilā.

What the poem says

Irāmaṉ's procession enters the main street of Mithilā. Women with henna-reddened feet pour out of the cloud-high mansions, and their glances fall on him like showers of flowers.

Their eyes are called poisonous, as women's eyes conventionally wound like arrows, yet on Irāmaṉ they turn into flowers. The lines may also mean that the high-born women stayed on their balconies, showering him with both blossoms and looks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pañci cūḻ mel aṭip pāvaimār paṇṇaicūḻ,
mañcu cūḻ neṭiya māḷikaiyiṉ vantu, iṭai virāy,
nañcu cūḻ viḻikaḷ, pū maḻaiyiṉ mēl viḻa, naṭantu,
iñci cūḻ mitilai mā vīti ceṉṟu eytiṉāṉ.