கம்பராமாயணம் 1135 · பால 18.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அணி அரங்கு அயல்எலாம் - (அந்த நகரத்து வீதிகளிலுள்ள) அழகிய மண்டபங்களின் பக்கங்களில் எல்லாம்; சூடகம் துயல் வர, கோதை சோர்தர - தம் கைவளைகள் அசையவும், கூந்தல் தளர்ந்து சரியவும், மலர்ப் பாடகம் பரத நூல் பகர - செந்தாமரை மலர் போன்ற மெல்லிய பாதங்களில் பாடகம் என்னும் காலணிகள் (நாட்டிய சாத்திரமாகிய) பரத நூலிற் கூறப்பட்ட தாளவிதி முறைகளைத் (தம் ஒலியால்) வெளிப்படுத்தவும்; வெங்கடகரிக்கோடு அரங்கிட எழும் குவிதடங்கொங்கையர் - கொடிய மதமுடைய யானைகளின் கொம்புகள் (அழகு) கெடும்படியாக, எழுந்து குவிந்து அகன்ற பெரிய தனங்களையுடைய மகளிர்; ஆடுஅரங்கு அல்ல - ஆடல்புரியும் நடன அரங்குகள் போல (எங்கும்) தோன்றினும் நடன அரங்கங்கள் என்று கருதவேண்டா; அவர்கள் வாழும் மாளிகைகளே அவை என்று துணிக.
வளை ஒலியும், குழல் சரிவும், காலணித் தாளமுமாகச் சூழ மங்கையர் ஒல்கி ஒசிந்து நிற்கும் இடம் எல்லாம் ஆடரங்கம் என்றே தோன்றும்; ஏமாற வேண்டா; அவரவர் மாடமாளிகைகளே எனச் சுறையுறக் கூறினார். மாளிகைகள் யாவும் அன்று மகளிர் ஆடரங்கம் போல மகிழ்வில் திளைத்தன என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With bangles swaying, hair coming loose, and on flower-soft feet
- the anklets beating out the rules of Bharata's treatise on dance, the women
- with full, wide breasts rising to shame the tusks of fierce, rutting elephants
- made every lovely hall nearby look like a dance stage, though none of them was one.
What the poem says
Wherever the women gather to watch Irāmaṉ pass, they move and sway so gracefully, bangles swinging, hair slipping loose, anklets keeping time as if by the rules of classical dance, that every hall along the street looks like a theatre.
The poet's twist is that these are not dance stages at all, just the women's own homes, so full of excitement that day that they seemed to be dancing.