கம்பராமாயணம் 1136 · பால 18.34

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆதி வானவர்பிரான் அணுகலால் - முதன்மையான தேவர்க்கும் முதல்வனாகும் திருமாலின் அவதாரமான இராமபிரான் (தங்கட்கு) அருகில் வந்தடைவதால்; பேதைமார் முதல் கடைப் பேரிளம் பெண்கள்தாம் - பேதைப் பருவத்தினர் முதலாகப் பேரிளம் பெண்ணுப் பருவத்தினர் இறுதியான மகளிர்; ஏதி ஆர் மாரவேள் ஏவ வந்து எய்தினார் - ஆயுதங்கள் நிரம்பின மன்மதன் ஏவியதனால் வந்தடைந்தவர்களால்; அணிகொள் கார் ஓதியார் - அழகமைந்த கருங்கூந்தலினையுடையவராய்; வீதிவாய் உற்றவாறு உரை செய்வாம் - (மிதிலை நகரத்) தெருக்களில் வந்து அடைந்த நிலைமையை (இனிக்) கூறுவோம்.

பரம பத நாதன் கைக்கெட்டும் தூரத்தில் வந்துள்ளான் ஆதலின், ஆன்ம நாயகனைத் தரிசிக்க அத்துணைப்பருவ மங்கையரும் தெருவில் நின்றனர் என்க. உயிர்கள் ஆன்ம நாயகனிடத்தில் வேட்கை கொள்ளுதல் கற்பு வழு அன்று என்பது தோன்ற, “ஆதி வானவர்பிரான் அணுகலால்” என்றார். எழுவகைப் பருவ மங்கையர்: பேதை (5-7); பெதும்பை (8-11); மங்கை (12-13); மடந்தை (14-19); அரிவை (20-25); தெரிவை (26-31); பேரிளம் பெண் (32-40). தாமாக வரவில்லை. அழியா அழகன் வீதிவந்தடைந்துள்ளான்; போய்க் கண்பெற்ற பயன்கொள்ளுங்கள் என்று, மன்மதன் செலுத்த வந்துள்ளனர் என்பார் “மாரவேள் ஏவ வந்து எய்தினார்” என்றார். வரும் படலத்திற்குத் தோற்றுவாயும் செய்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Women from the youngest girls to the oldest of mature women
  2. came, sent by Kāmaṉ, god of love, armed with his weapons:
  3. now, because the lord of the first gods drew near, we shall tell how those
  4. women with lovely dark tresses fared in the streets.

What the poem says

This verse closes the chapter and announces the next. Because Irāmaṉ, the incarnation of the supreme god Tirumāl, is passing close by, women of every age, from little girls to mature matrons, pour into the streets as if driven by the love god's arrows.

Tamil poetics divides a woman's life into seven stages, from pētai (about five to seven years old) to pēriḷampeṇ (thirty-two to forty), and the poet names the first and last to mean all of them. The commentary explains that the soul's longing for God is no breach of chastity. The next chapter describes these women in the street.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pētaimār mutal kaṭaip pēriḷam peṇkaḷtām
ēti ār māravēḷ ēva vantu eytiṉār,
āti vāṉavar pirāṉ aṇukalāl aṇi koḷ kār
ōtiyār, vītivāy uṟṟavāṟu uraiceyvām.