கம்பராமாயணம் 1138 · பால 19.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருங்கலம் அனைய மாதர் - (அந்த மிதிலை நகருக்கு) அரிய அணிகலம் போன்று அழகு ஊட்டும் மகளிர்; விரிந்து வீழ் கூந்தல் பாரார் - (கூட்டத்தால் நெருக்குண்டு) விரிந்து வீழ்கின்ற தம் கூந்தலைப் பொருட்படுத்தார்; மேகலை அற்ற நோக்கார் - (இடையில் அணிந்துள்ள) மேகலைகள் அற்று வீழ்ந்தனவற்றைப் பொருட்படுத்தார்; சரிந்த பூந்துகில்கள் தாங்கார் - பூப்போன்ற மெல்லிய ஆடைகளின் இடையிலிருந்து சரிவதைப்பிடித்து ஏந்தவும் கருதார்; இடை தடுமாறத் தாழார் நெருங்கினர் - தங்கள் நுண்ணிய இடைகள் (ஆற்றாது) நிலைதளர்வது கண்டு சிறிதும் தாழாமல், (இராமபிரானை) நெருங்கினார் ஆகிய மகளிர்; நெருங்கிப்புக்கு நீங்குமின் நீங்குமின் என்று - நெருங்கிய வாறே நுழைந்து வழிவிடுங்கள், வழிவிடுங்கள் என்று கூறிய வண்ணமே; தேன்நுகர் அளியின் மொய்த்தார் - தேன்பருகத் துடிக்கும் வண்டுகளைப்போல, (இராமபிரானை) மொய்த்தனர்.
“செவிக்குத்தேனா”கிய (கம்ப. ) இராமபிரான் கண்ணுக்கும் தேனானான்; காணவந்த மகளிர் உண்ண வந்த வண்டானார் என்க.
இராமன் அழகெனும் தேனைப்பருக வந்த மகளிர் ஒருவர்க்கு ஒருவர் இடித்துக்கொண்டு நெருக்கியவாறு முந்துதலால், கூந்தல்கள் சரிந்தன; மேகலைகள் அற்றன; மெல்லிடைகள் நெளிந்தன என்றார். உள்ளம் ஒன்றில் தோய்ந்து விட்டால், உடலும் உடல் சார்ந்த பொருள்களும் ஒரு பொருட்டாகக் கவனம் பெறுவதில்லை என்னும் உளவியல் தத்துவத்தை, இராமன்கோலம் காண வந்த மகளிரின் அலங்கோலம் கொண்டு விளக்கியுள்ள திறம் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They did not heed their hair coming loose and falling, did not look at their snapped girdles,
- did not hold up their slipping flower-fine garments, did not slow though their waists faltered;
- they pressed close, and pressing in, crying “Make way! Make way!”,
- those women, precious as jewels, swarmed like bees come to drink honey.
What the poem says
In the crush to see Irāmaṉ, the women forget themselves: hair comes undone, jewelled girdles snap, garments slip, slender waists bend under the press, and none of them stops to care. Calling “Make way!” they push forward and swarm around him like bees round honey.
The commentary notes the psychological truth here: when the mind is wholly absorbed in one thing, the body and its adornments cease to matter. Irāmaṉ, already sweet to the ear in report, now becomes honey for the eye.