கம்பராமாயணம் 1139 · பால 19.3

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் ! இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும்!' என்பார்,
மண்ணின் நீர் உலர்ந்து வானம் மழை அற வறந்த காலம் அத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார்.

பொருள் · Meaning in Tamil

கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் - (நம்முடைய) கண்களினாலேயே, (காட்டலாகாப்பொருளாகிய) காதல் என்னும் பொருளின் (வடிவத்தையே) இங்குக் காண்கின்றோம், இப்பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் - (ஆதலால்) இந்தப்பெண்தன்மை கொண்டதனால் வாழ்நாளில் அடையத்தக்க, பயனை, (இவனை இப்போது கண்டதனால்) இன்றே பெற்றுவிடுவோம் என்று நினைப்பாராய்; மண்ணின் நீர் உலந்து, வானம் மழையற வறந்த காலத்து - பூமி முழுவதும் நீர் வற்றி, விண்ணில் மேகங்கள் மழை பொழியாது வறண்டு போன காலத்தில்; உண்ணும் நீர் கண்டு, வீழும் உழைக்குலம் பலவும் ஒத்தார் - பருகத்தக்க நன்னீரை, (ஓரிடத்திலே) கண்டு, அதனைக் குடித்தற்குத் தாவும் மான் கூட்டங்களைப் போன்று (மகளிர்) இராமனைக் காண மொய்த்தார்கள்.

பண்புப் பொருள்கள் எல்லாம் கண்ணால் காண இயலாதவை. “நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்ப” (தொல். பொருளியல். 5/1) என்பவாதலின், கண்ணால் காணவியலாத காதல் எனும் பண்புப் பொருள் மானுட வடிவம் பெற்று வந்துள்ளது; வாருங்கள்; பெண்ணாய்ப் பிறந்த பயனை இன்று பெற்று விடுவோம் என்று இராமனைக் காண மிதிலை மகளிர் ஓடினர் என்க. உலகில் தெய்விகக் காட்சி காண்டற்கு அரியதாதலின் மழை வறண்ட காலத்து, உண்ணும் நீர் கண்டுவிட்ட மான் இனத்துக்கு மகளிரை உவமையாக்கினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “With our own eyes we are seeing the very thing called love! Today
  2. we gain the reward that comes of being born women!” they said,
  3. like the many herds of deer that, when the earth's water has dried up and the sky has withered without rain,
  4. spy water to drink and rush down upon it.

What the poem says

The women tell one another that love, which can never be seen with the eyes, has taken a human form before them, and that today they will reap the whole reward of having been born women.

They rush toward Irāmaṉ like deer in a drought that suddenly catch sight of drinking water. The comparison reflects how rare it is to glimpse the divine in this world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaṇṇiṉāl kātal eṉṉum poruḷaiyē kāṇkiṉṟōm! im
peṇṇiṉ nīrmaiyiṉāl eytum payaṉ iṉṟu peṟutum!' eṉpār,
maṇṇiṉ nīr ulantu vāṉam maḻai aṟa vaṟanta kālattu
uṇṇum nīr kaṇṭu vīḻum uḻaik kulam palavum ottār.