கம்பராமாயணம் 1145 · பால 19.9

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குழைஉறா மிளிரும் கெண்டை - காதணியின் மேல்சென்று ஒளிரும் கெண்டை மீன்களைப் போன்ற கண்கள்; கொண்டலின் ஆலிசிந்த - மேகங்கள் துளிகளைப் பொழிதல் போல, கண்ணீர்த்துளிகளைச் சிந்தி நிற்க; தழைஉறாக் கரும்பின் சாபத்து அனங்கவேள் சரங்கள் பாய - தழையில்லாத கரும்பினை வில்லாகக்கொண்ட மன்மதன் (மலர்க்) கணைகள் (தன்மேல்) பாய்வதனால்; புண்அறாத - புண்கள் நீங்காத; இழை உறா இளமுலை ஒருத்தி சோர்ந்து - நூல் இழை நுழையும் அளவும் வெற்றிடம் இல்லாத இளைய தனங்களையுடையாள் ஒருத்தி, தளர்ந்தவளாய்; மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் - மேகத்தில் உதிக்காமல் (மண்ணில் உதித்த) மின்னற்கொடி போன்ற (தனது) இடையினைப் போலவே (மற்றையங்கங்களும் இளைத்து) (இராமன் சென்றுவிட்டதனால்) சோர்ந்து போய் நின்றாள்.

மழை உறா மின்; தழைஉறாக் கரும்பு - இல்பொருள் உவமைகள். இடையைப்போல, உடல் முழுதும் இளைத்தது என்றதனால், இடையின் இளைப்பை உய்த்துணர்க, என்பது குறிப்பு. “மென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்” (கம்ப. 5072) என்பார் மேலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As her glittering carp-like eyes, reaching to her earrings, shed drops like a raincloud,
  2. and the arrows of the bodiless god, whose bow is a leafless sugarcane, pierced her,
  3. one young woman, her breasts so close no thread could pass between, never free of their wounds, grew faint
  4. and stood drooping, like her own waist, a lightning streak that touches no cloud.

What the poem says

Another woman, struck by the love god's flower-arrows on seeing Irāmaṉ, weeps and wilts. Her long, fish-shaped eyes, reaching to her ears, shed tears like rain.

Her whole body now droops and grows thin like her slender waist, which is compared to a lightning streak that has no cloud. That image, like the love god's leafless sugarcane bow, is a deliberately impossible comparison, a recognised figure in Tamil poetics.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuḻai uṟā miḷirum keṇṭai koṇṭaliṉ āli cinta,
taḻai uṟāk karumpiṉ cāpattu aṉaṅka vēḷ caraṅkaḷ pāya,
iḻai uṟāp puṇ aṟāta iḷa mulai orutti, cōrntu,
maḻai uṟā miṉṉiṉ aṉṉa maruṅkulpōl, nuṭaṅki niṉṟāḷ.