கம்பராமாயணம் 1146 · பால 19.10

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பஞ்சு இவர் விரலினார் தம் படை நெடும் கண்கள் எல்லாம்
செஞ்செவே ஐயன் மெய்யில் கருமையைச் சேர்ந்த ஓ தாம்?
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போக்க இருண்டது ஓ? அறிகிலேம், ஆல்.

பொருள் · Meaning in Tamil

பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங்கண்கள் எல்லாம் - செம்பஞ்சுக்குழம்பை அணிந்த (மெல்லிய) விரலினையுடைய அப்பெண்டிரின் வாள் போன்ற கண்கள் யாவும்; செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோதாம்? - இராமபிரானின் உடலின் கருமையை அவை அடைந்தனவோ?, மஞ்சு அன மேனியான்தன் மணிநிறம் - (அல்லது) மேகத்தை ஒத்த மேனியான் ஆகிய இராமபிரானின் அழகிய நிறம்; மாதரார்தம் அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ? - பெண்டிரின் அஞ்சன மையிட்ட கண்கள் (அவனது திருமேனியில்) மொய்த்துக் கடந்தமையால் அது கருமையையடைந்ததோ?; அறிகிலேமால் - (இவ்விரண்டில் எது நிகழ்ந்தது? என) எம்மால் துணிந்து அறியக் கூடவில்லை.

ஐயனின் மேனியும் அரிவையர் விழிகளும் நிறத்தில் ஒன்றுக்கொன்று கொண்டு கொடுத்துக் கொள்ளும் தகுதியுடையனவாய் இருந்தன என்பது கருத்து. பெண்கள் தம் கண்கள் அவன் திருமேனியில் ஊன்றிக்கிடந்தன என்பதாம். பஞ்சு அணி விரலினார் - செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட விரலினையுடைய மகளிர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Did all the long, sword-like eyes of the women with lac-painted fingers
  2. take their darkness straight from the lord's own body?
  3. Or did the gem-like hue of the one whose body is like a raincloud
  4. turn dark because the women's kohl-lined glances covered it? We cannot tell.

What the poem says

The poet poses a playful riddle. The women's eyes, dark with kohl, are fixed on Irāmaṉ's dark, cloud-coloured body. Did their eyes become dark by taking on his colour, or did his body grow dark from being covered all over by their dark glances?

He declines to decide. The point is that their gaze is fastened on him, and that his body and their eyes are so alike in colour they could have lent it to one another.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pañcu aṇi viraliṉārtam paṭai neṭuṅ kaṇkaḷ ellām
ceñcevē aiyaṉ meyyiṉ karumaiyaic cērntavōtām?
mañcu aṉa mēṉiyāṉtaṉ maṇi niṟam mātarārtam
añcaṉa nōkkam pōrkka iruṇṭatō? aṟikilēmāl.