கம்பராமாயணம் 1154 · பால 19.18

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வரிந்த வாள் அனங்கன் வாளி மனம் கழன்றனவும், மாதர்
எரிந்த பூண் இனமும், கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்,
சரிந்த மேகலையும், முத்தும், சங்கமும், தாழ்ந்த கூந்தல்
விரிந்த பூந் தொடையும் அன்றி, வெள் இடை அரிது அவ் வீதி.

பொருள் · Meaning in Tamil

வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப - வரிந்து கட்டிய மன்மதனது அம்புகள் (அங்குள்ள மாதர்) மனங்களில் (வந்து) பாய்கையில்; மாதர் எரிந்த பூண் இனமும் - அம்மகளிரின் (விரக தாபம் மிக்க உடம்பிலே படுதலால்) தீய்ந்து விழுகின்ற அணிகளின் தொகுதியும்; கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் - (வெப்பத்தால்) தனங்கள் வெயர்த்தபோது அங்கிருந்து கரைந்தொழுகிய சந்தனமும்; சரிந்த மேகலையும் முத்தும் சங்கமும் - விரகத்தால் உடல் இளைத்தமையால் கழன்று சரிந்த மேகலையும் முத்து மாலைகளும் சங்கு வளையல்களும்; தாழ்ந்த கூந்தல் விரிந்த பூந் தொடையும் அன்றி - நீண்ட கூந்தல் அவிழ்ந்து விரிவதால் வீழ்ந்த மலர்மாலை அல்லாமல்; அவ்வீதி வெள்ளிடை அரிது - வெற்றிடமாக ஓரிடமும் அவ்வீதியில் இல்லை.

மகளிர் நெருக்கத்தை மேலிட்டுக் கொண்டு, ஆங்குள்ள வளத்தின் பெருக்கமும் மாதர் பெருக்கமும் உரைத்தவாறு. தெருக்களில் மகளிர் கவனியாது கழலவிட்ட அணிகலக் குவியல்களும், சந்தனச் சேறும், சரிந்த மாலைகளும் குப்பையாகக் கிடந்தன என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the arrows of the love god with his bound bow pierced their hearts, the women's
  2. scorched jewellery, the sandal paste that ran down when their breasts broke into sweat,
  3. their slipped girdles, their pearls, their conch bangles, and the opened flower-strings
  4. from their long hair: apart from these, there was hardly a bare spot in that street.

What the poem says

After the procession, the street is littered with what the love-struck women have shed: ornaments scorched by the heat of their passion, sandal paste melted off by their sweat, girdles, pearls and shell bangles that slipped from wasting bodies, and flower garlands fallen from loosened hair.

The verse conveys at once the size of the crowd and the wealth of Mithilā, whose streets are paved with lost jewels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1varinta vil aṉaṅkaṉ vāḷi maṉaṅkaḷil taippa, mātar
erinta pūṇ iṉamum, koṅkai veyarttapōtu iḻinta cāntum,
carinta mēkalaiyum, muttum, caṅkamum, tāḻnta kūntal
virinta pūntoṭaiyum aṉṟi, veḷḷiṭai aritu av vīti.