கம்பராமாயணம் 1153 · பால 19.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கருங் குழல் பாரம் - (தனக்கு முன்னே வந்து, இராமனைக் காண இடம்பிடித்துக் கொண்டுள்ள மாதர்களின்) கரிய கூந்தலின் தொகுதியும்; வார்கொள் கனமுலை - கச்சணிந்த பருத்த மார்புகளும்; கலை சூழ் அல்குல் - மேகலை சூழப்பெற்ற இடைசார் பகுதியும் (எங்கும்); நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கிடம் பெறாது - நெருக்கம் உற்றனவாய் (இராமன் திருமேனி காணாவாறு) மறைத்து நிற்றலால் இவையற்ற இடம் இல்லாமையால்; விம்மும் பெருந்தடங்கண்ணி - வருந்தி மறுகும் மிகப் பெரிய கண்களையுடையாள் ஒருத்தி; பேர் எழில் ஆசை தூண்ட - (அவள் கேள்வியுற்ற இராமனது) பேரழகு, அவனைப் பார்த்தாக வேண்டும் என்றும் ஆசையினைத் தூண்டுதலால்; மருங்குலின் வெளிகளூடே வள்ளலை நோக்குகின்றாள் - முன்னே மறைந்து நிற்கும் மகளிரின் இடையின் இடைவெளிகளிடையே வள்ளலாகிய இராமபிரானைப் பார்த்துக்கொண்டிருக்கின்றாள்.
“அகல் அல்குல் தோள் கண் என மூவழிப்பெருகி, நுதல், அடி, நுசுப்பு என மூவழிச் சிறுகி” (கலி. 108) எனும் உத்தம மங்கையர் இலக்கணம் முற்றும் அமைந்த மகளிரே அங்கே உள்ளோர் அனைவரும் எனும் கருத்தைச் சுவையுறக் கூறியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As masses of dark hair, heavy breasts bound in bodices, and hips wrapped in girdles
- crowded together and blocked her view, finding no gap there,
- one woman with great wide eyes, sobbing, urged on by longing to see that great beauty,
- gazes at the generous one through the spaces between the women's slender waists.
What the poem says
A latecomer cannot see Irāmaṉ: the women in front are a solid wall of thick hair, full breasts and broad hips. The only gaps she can find are beside their narrow waists, and she peers at him through those.
The joke rests on the classical ideal of female beauty, broad in hips, shoulders and eyes, narrow in brow, feet and waist. Every woman in the crowd is so perfectly formed that the only openings are at the waist.