கம்பராமாயணம் 1152 · பால 19.16

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1களிப்பன, மதர்ப்ப, நீண்டு கதுப்பினை அளப்ப, கள்ளம்
ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன, சிவப்பு உள் ஊற
வெளிர்ப்பன, கறுப்ப ஆன வேல் கணாள் ஒருத்தி உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள், வெதுப்பொடும் கோயில் புக்காள்.

பொருள் · Meaning in Tamil

களிப்பன, மதர்ப்ப, நீண்டு கதுப்பினை அளப்ப - (இயல்பாகிய) களிப்புத் தோன்றுவனவும், செழிப்புத் தோன்றுவனவும் நீளமாய்ச் சென்று கூந்தலை அளப்பனவும்; கள்ளம் ஒளிப்பன வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன - உள்ளத்து உள்ளதை மறைக்கும் கள்ளம் உள்ளனவும், இமைகளுக்கு வெளியே வந்து ஓடப் பார்ப்பன போன்றனவும்; சிவப்பு உள் ஊற வெளுப்பன கறுப்ப ஆன வேற்கணாள் - உள்ளுள்ள சிவந்த (நரம்பில்) இரேகைகள் வெளித் தெரிவனவும் (சில பகுதிகள்) வெளுத்தும் (சில பகுதிகள்) கறுத்தும் உள்ளதுமாகிய வேல் போன்ற விழிகளையுடையாள் ஒருத்தி; உள்ளம் குளிர்ப்பொடு காண வந்தாள் - உள்ளங் குளிர்ந்த மகிழ்வோடு (இராமனைக்) காண வந்தாள்; வெதுப்பொடு கோயில் புக்காள் - கண்டவுடன் வந்த (காதல்) வெப்பத்தைச் (சுமந்தவாறு) தன் மாளிகைக்குள் சென்று சேர்ந்தாள்.

இத்துணைச் சிறப்புக்களையும் உடைய கண்கள் குளிர்ச்சியோடு வந்தவளை வெப்பத்தோடு போக உதவின என்று வியந்தவாறு. தன் பார்வையிலிருந்தும் இராமன் விலகியவுடன் எழுந்த காமதாபம் நெருப்பாகச் சுட்டதால் “வெதுப்பொடும் கோயில் புக்காள்” என்றார். முதல் மூன்றடிகளிலும் கண்ணின் சிறப்பை உரைத்துள்ள திறம் ஓர்க. மதர்ப்பு: செழிப்பினால் உண்டான செருக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Joyful, proud, long enough to measure the length of her tresses, hiding
  2. their secrets, looking as if they would break out and run, with red welling up within,
  3. white, and dark: with such spear-like eyes one woman came
  4. to look with a cool, glad heart, and went back into her house burning.

What the poem says

Three lines describe one woman's eyes: bright and bold, so long they seem to stretch back to her hair, secretive, almost bursting from their lids, with red veins within, white and black.

She came out light-hearted and calm to see Irāmaṉ, but those same eyes let in the fire of love, and she went home burning with longing once he had passed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḷippaṉa, matarppa, nīṇṭu katuppiṉai aḷappa, kaḷḷam
oḷippaṉa, veḷippaṭṭu ōṭap pārppaṉa, civappu uḷ ūṟa
veḷuppaṉa, kaṟuppa āṉa vēlkaṇāḷ orutti uḷḷam
kuḷirppoṭu kāṇa vantāḷ, vetuppoṭu kōyil pukkāḷ.