கம்பராமாயணம் 1169 · பால 19.33

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர் - அந்நகரத்தை வாழ் இடமாகக் கொண்ட பெண்டிர் தொகைக்கும் அளவு என்பது இல்லை; ஐயன் பொற்புக்கு அளவிலை - இராம பிரானது அழகுக்கும் அளவு என்பது இல்லை; ஆதலால், எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான்? - (அந்த மங்கையர் உள்ளத்தில் எய்ய வேண்டிய மலர்க் கணைகளின் தேவைக்கும் ஓர் அளவில்லை) ஆதலினால் (மலர்) அம்பெய்கின்ற அழகிய வில்லினையுடைய மன்மதனும் யாது செய்வான்?; கை அம்பு அற்று - (தன்) கையில் உள்ள (மலர்) அம்புகள் எல்லாம் தீர்ந்து போய்; உடைவாளினும் கை வைத்தான் - (அம்மாதர் மேல் பாய்ச்சும் பொருட்டு) உடைவாளின் மேலும் கையை வைத்தான்.

காமன் “கையம்பு அற்று உடைவாளினும் கை வைக்க” நேர்ந்தது எனக் குறித்தவாற்றால் மன்மதன் தோல்வியும் மகளிர் ஆற்றாமையும் இராமனின் உடல் அழகும் குண அழகும் ஒருங்கே வெளிப்படுத்தியவாறு. மன்மதனுக்கும் அங்குள்ள மகளிர்க்கும் நடந்த போரின் தீவிர நிலை தெரிவித்தவாறுமாம். தொலைவிலிருந்தால் அம்பாலும் அருகிலிருந்தால் வாளாலும் தாக்குவது போர் முறையாதலின், மன்மதன் மகளிரை மிக நெருங்கி வந்துவிட்டான் என்பதை “உடை வாளினும் கை வைத்தான்” என்பதனால் உணர்த்தினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The women who filled the land were beyond counting;
  2. the lord's beauty was beyond measure; and so,
  3. what could Māraṉ, who shoots with his lovely bow, do?
  4. His arrows spent, he put his hand to the sword at his side.

What the poem says

There are countless women in Mithilā and Irāmaṉ's beauty is boundless, so the love god has to shoot an endless number of arrows. He runs out, and reaches for his sword.

The joke also has a military logic: in battle one uses arrows at a distance and the sword at close quarters, so the love god has come right up against the women. The verse shows his defeat, the women's helplessness, and Irāmaṉ's beauty of body and character all at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaiyam paṟṟiya maṅkaiyar eṇṇilar;
aiyaṉ poṟpukku aḷavu ilai; ātalāl,
eyyum poṉ cilai māraṉum eṉ ceyvāṉ?
kai ampu aṟṟu, uṭaivāḷiṉum kai vaittāṉ.