கம்பராமாயணம் 1168 · பால 19.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேனி வேர்த்து உயிர் தளர்ந்து - (இராம வேட்கையுற்றாள் ஒருத்தி) உடல் வியர்த்து உயிர்நிலை குலைந்து; விம்மலோடு ஆர்த்தியுற்ற மடந்தையர் ஆரையும் - விம்முதலோடு அருந்துயர் உற்ற பெண்டிர் எவரையும்; தீர்த்தன் சிந்தையின் செங்கணின் இத்தனை பார்த்திலான் - தூயோனான இராமபிரான், உள்ளத்தாலும் சிவந்த கண்களாலும் சிறிதேனும் நோக்கினான் அல்லன்; உள் பரிவிலனோ என்றாள் - அப்பெருமான் உள்ளத்தே (சிறிதேனும்) அன்பு என்பதே இல்லாதவனோ? என்று (துயரோடு) வினாவினாள்.
எத்தனை மகளிர் மொய்ப்பினும் ஏறெடுத்தும் நோக்காத இராமனின் இயல்புத் திறம் கூறி, இராமபிரானின் ஏக பத்தினி விரதத்தின் ஏற்றத்திற்கு அடித்தளம் இட்டவாறு. “இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்” (கம்ப. 5378) என்ற செம்மையன் இராமன் ஆதலான் “தீர்த்தன் இத்தனை சிந்தையின் செங்கணின் பார்த்திலன்” என்றார். ஆகவே, இத்துணைப் பெண்கள் மொய்ப்பதாகக் கூறுவதெல்லாம் இராமபிரானின் ஏற்றம் உயர்த்தவே என்பதனை உய்த்துணர்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sweating, her body weak, her breath coming in sobs, one woman said:
- “Of all the women in such anguish, not one
- has the holy one looked at even this much, with his mind or with his red eyes:
- has he no pity within him?”
What the poem says
A sobbing woman complains that Irāmaṉ, for all the women suffering over him, has not given a single one of them even a glance, neither with his eyes nor in his thoughts. Has he no tenderness at all?
The commentary explains that the whole crowd scene serves to set off Irāmaṉ's virtue. He is the man who later vows never even to think of any woman but his one wife, so the more women swarm around him, the higher his steadfastness shines.