கம்பராமாயணம் 1167 · பால 19.31

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ்வாய்ச்சியர் - செவ்வாம்பல் மலரைப் போன்று, அமுதம் போன்ற இனிமையூறுதற்கு இடமான சிவந்த வாயினையுடைய மகளிர் பலரும்; தாம் பதைத்து உள்உயிர் தடுமாறுவார் - (இராம வேட்கையால் மனமும் உடம்பும்) துடித்து, உடலினுள் உள்ள உயிர் நிலை கலங்கினர்; தேம்பு சிற்றிடைச் சீதையைப் போல் - வருந்தும் மெல்லிய இடையுடையாள் ஆகிய சீதையினைப் போல; ஏம்பல் சிறிது பெற்றிலர் - மகிழ்தற்கான காரணத்தைச் சிறிதும் பெறாதவர்களாகிய இவர்கள்; எங்ஙனம் உய்வரே? - எவ்வாறு பிழைப்பார்?

மகிழ்தற்குக் காரணம் சிறிதே இருப்பினும் மகளிர் பிழைத்துக் கொள்வர்; இன்றேல் பிழைத்தல் இயலாது எனக் கவிஞர் பெண்மையின் மென்மை நினைந்து ஏங்கியவாறு. அமுது ஊறியும் பயன் கொள்ளப்படாமல் உள்ளது என்பார், “அமுது ஊறு வாய்ச்சியர்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Women with red lips like water-lilies, welling with nectar,
  2. trembled, their lives faltering within them:
  3. not having even a little of the joy that Cītai of the slender, aching waist had,
  4. how are they to survive?

What the poem says

The poet himself now sighs for the women. Cītai, whose slender waist seems to ache under its own weight, at least has the joy of knowing Irāmaṉ will be hers. These women, quivering with desire, have not the least such hope, so how can they live?

Their lips are said to well with nectar, a nectar no one will now taste.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āmpal ottu amutu ūṟu cev vāycciyar
tām pataittu uyir uḷ taṭumāṟuvār:
tēmpu ciṟṟiṭaic cītaiyaippōl ciṟitu
ēmpal peṟṟilar eṅṅaṉam uyvarē?