கம்பராமாயணம் 1166 · பால 19.30

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இணை நெடும் கண் ஒர் இந்து முகத்தி, பூ
அணை அணைந்து இடி உண்ட அரா, எனப்,
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட,
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே.

பொருள் · Meaning in Tamil

இணை நெடுங்கண் ஓர் இந்து முகத்தி - (ஒன்றோடொன்று ஒத்த) இரண்டு கண்களையுடைய சந்திரன் போன்ற முகமுடையாள் ஒருத்தி; பூ அணை யடைந்து - (இராமன் மேல் கொண்ட வேட்கையால் நிற்கவும் இயலாமல்) மலர்கள் பரப்பப்பட்ட மஞ்சத்தையடைந்து; இடியுண்ட அரா என - இடியோசை கேட்ட பாம்பினைப் போல; புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட - நெருங்கிய அழகுமிக்க மார்பகங்கள் வியர்த்துப் போக; உணர்வு அழுங்க ஆவி உயிர்த்தனள் - அறிவு மழுங்கிடப் பெருமூச்செறிந்து கொண்டிருந்தாள்.

அணையா வேட்கை அடைவிக்கும் சில மெய்ப்பாடுகள் சுட்டியபடி. இராமன் போய் விட்டான் என்ற தோழி கூற்று, அவளுக்கு இடியோசை கேட்ட நாகம் வளைகளில் ஓடி ஒளிந்து கொள்வது போல, தன் அறை அடைந்து பூ அணைக்குள் புகுந்தாள் என்பதாம். நிலா, பாம்புக்கு அஞ்சும் ஆதலால், இவளை “இந்து முகத்தி” எனப் பொருந்தக் கூறினாள். இந்து: சந்திரன் - உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One moon-faced woman with a pair of long eyes reached her flower-strewn bed
  2. and, like a snake struck by thunder,
  3. her close-set, lovely breasts sweltering,
  4. her senses failing, breathed out long, hot sighs.

What the poem says

Told that Irāmaṉ has gone by, a woman flees to her bed of flowers like a snake that hears thunder and darts into its hole, and lies there sweating and sighing, half senseless with longing.

The commentary notes the neat fit of the images: she is called moon-faced, and in Indian myth the moon fears the serpent that swallows it at an eclipse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṇai neṭuṅ kaṇ or intu mukatti, pū
aṇai aṭaintu iṭiyuṇṭa arā, eṉa,
puṇar nalam kiḷar koṅkai puḻuṅkiṭa,
uṇarvu aḻuṅka uyirttaṉaḷ āviyē.