கம்பராமாயணம் 1165 · பால 19.29

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி - காட்டில் வதிந்து கார்காலத்து மேகங்களைக் கண்டு மகிழ்கின்ற மயில் போலவும் பொற்கொடி ஒன்று போலவும் அழகு உடைய ஒரு மங்கை; மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் - தன் மனத்தகத்தே (இராமன் மேற்கொண்ட காதலை வெளித் தெரியாமல் மறைத்தற்கு எண்ணினாள்; அனங்க வேள் அது அறிந்தனன் - (மனத்தில் தோன்றுபவனாகிய) மன்மதன் அதனை அறிந்து கொண்டான்; அற்றம் தான் மனங்கள் போல் முகமும் மறைக்குமே? - (அவள் மனத்துள் உள்ள காதலை முகத்தில் அவன் வெளிப்படுத்திவிட்டான். ஆகவே) (தெரியாது மறைந்திருக்கும் மனங்களில் மறை பொருள்களை மறைக்கலாம்.) எல்லோர்க்கும் தெரியும் பொருளாகிய முகங்களில் மறைபொருள்கள் வெளிப்பட்டுவிடும் (மனம் போல் மறைத்தல் இயலாது).

கார் கண்டு மகிழும் காட்டு மயில் போலக் கார்முகில் வண்ணனாம் இராமபிரானைக் கண்டு களித்தாடும் வீட்டு மயில் இவள் என்பார், “கார்மயில் போலும்” என்றார். “பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” (திருக். 706) ஆதலால் “மனங்கள் போல முகங்கள் மறைக்குமே” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One woman, a golden creeper, like a peacock in the woodland rejoicing at the rainclouds,
  2. thought she would hide the love she held in her heart;
  3. but the bodiless god of love found it out: can a secret
  4. be hidden by faces as it is by hearts?

What the poem says

A woman delights in dark Irāmaṉ as a peacock dances at the sight of rainclouds, but she tries to keep her love a secret. The love god, who lives in the mind, knows at once and makes it show on her face.

A heart can hide what it holds; a face cannot. The commentary cites the Tirukkuṟaḷ: as a crystal takes the colour of what is near it, the face shows what the heart feels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṉam koḷ kār mayil pōlum or poṟkoṭi,
maṉam koḷ kātal maṟaittalai eṇṇiṉāḷ;
aṉaṅkavēḷ atu aṟintaṉaṉ; aṟṟamtāṉ,
maṉaṅkaḷ pōla mukamum maṟaikkumē?