கம்பராமாயணம் 1173 · பால 19.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒரு பாகு இன்மொழி - (கருப்பஞ் சாற்றின்) பாகு போன்ற இனிக்கும் மொழி பேசுவாள் ஒருத்தி; பூக ஊசல் புரிபவர் போல் - பாக்கு மரங்களுக்கிடையே கட்டப்பட்ட ஊஞ்சலில் விரும்பி ஆடுபவர் போன்று; தன் மலர்ப் பாதங்கள் சேகு சேர்தரச் சேவகன் தேரின்பின் ஏகும்; மீளும் - தன்னுடைய செந்தாமரைப் பூப்போன்ற சிவந்த பாதங்கள் மேலும் சிவந்து போகும்படி உயர் வீரனான இராமனின் தேர் ஏகுகையில் பின்னால் செல்வாள், நாணத்தால் மீள்வாள்; இது என் செய்த வாறு? - (தொடர்ந்து ஏகவும் மீளவும் இருக்கும் இவள்) என்ன கருதி இவ்வாறு செய்கிறாள்?
அரோ - அசை ஒன்று. போக வேண்டும்; அல்லது திரும்பிவிட வேண்டும். இரண்டில் ஒன்று செய்யாமல் இரண்டும் செய்கிற இவள் உகந்தது என் என வியந்தார். மையல் கொண்டார் ஊசல் ஆடும் உளத்தினராய்த் தவிப்பவர் எனச் சுட்டியவாறு. “கமுகு பூண்ட ஊசலில், மகளிர் மைந்தர் சிந்தையோடு உலவக் கண்டார்” (கம்ப. 488) எனவும் “ஊசல் ஆடி வளையும் உளத்தினான்” (கம்ப. 5167) எனவும் தடுமாறு நிலைக்கு ஊசலை உவமிப்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like someone riding a swing hung between areca palms, one woman
- whose speech was sweet as syrup, till her flower-soft feet
- grew red and sore, would go after the hero's chariot
- and then come back: what was she doing?
What the poem says
A sweet-voiced woman keeps following Irāmaṉ's chariot, then turning back out of modesty, then following again, until her soft feet are red and sore. She swings to and fro like someone on a swing.
The poet asks what she can be after, since she neither goes nor stays. The swing is his recurring image for a mind torn by love.