கம்பராமாயணம் 1179 · பால 19.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திருவின் நாயகன், மின் திரிந்தால் எனத் துருவு மாமணி ஆரம்துயல் வர - திருமகளின் நாயகனாகிய இராமபிரான் மின்னல் உலாவித் திரிந்தாற்போல, தேடி எடுத்துப் பதித்த சிறந்த (இரத்தின) மணிமாலைகள் தன் மார்பில் அசைந்து ஒளி வீச; பருவமேகம் படிந்தது போல் படிந்து - கார் காலத்து (நீர்கொண்ட கரிய) மேகம் (பூமியிலே வந்து) தாழப்படிந்தது போல, கீழே தாழ்ந்து; இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான் - வசிட்டன் விசுவாமித்திரன் என்னும் இருவரின் திருவடிகளையும் முறையே வணங்கினான்.
கார்மேகம் மண் நோக்கித் தாழ்வது, உலகு வளம் செழிப்பதற்கு ஆதலின், இராம மேகமும் உலகுக்கு நலம் செழிக்கத் தாழ்ந்தது என்க. வசிட்டன் குலகுரு. விசுவாமித்திரன் இடைவந்த குரு. ஆகவே, வசிட்டனை முதலில் வணங்கி, அடுத்து விசுவாமித்திரனை வணங்கினான் என்பதுணர்த்த, “இருவர்தாளும் முறையின் (முறைப்படி) வணங்கினான்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord of Tiru, as his necklaces of choice gems swung
- like lightning flickering to and fro,
- bowed low like a monsoon cloud settling down to earth,
- and worshipped the feet of the two in due order.
What the poem says
Irāmaṉ, the husband of the goddess of fortune in his divine form, bows to the two sages. His jewelled necklaces flash like lightning as he bends, and his dark form lowering itself is like a rain cloud settling over the earth.
As a monsoon cloud comes down to make the world fertile, so Irāmaṉ's humility brings blessing. He bows first to Vacittaṉ, the family guru, and then to Vicuvāmittiraṉ, his later teacher, as protocol requires.