கம்பராமாயணம் 1178 · பால 19.42

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாதர் இன்னணம் மொய்த்திட, வள்ளல் போய்க்,
கோது இல் சிந்தை வசிட்டனும், கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்,
ஏதி மன்னர் குழாம் அத்து ஒடும் எய்தினான்.

பொருள் · Meaning in Tamil

மாதர் இன்னணம் எய்திட - (பல்வேறு பருவத்து) மகளிரும் இத்தகைய நிலையினை அடைந்திட; வள்ளல் போய் - இராம பிரான் சென்று; கோதில் சிந்தை வசிட்டனும் - குற்றமற்ற மனத்தினனாகிய வசிட்ட மாமுனிவனும்; கோசிக வேத பாரனும் - கோசிக முனி என்கின்ற வேதங்களின் கரைகளைக் கண்ட விசுவாமித்திரனும்; மேவிய மண்டபம் - வந்து வீற்றிருக்கின்ற மண்டபத்தை; ஏதி மன்னர் குழாத் தொடும் எய்தினான் - படைக்கலம் ஏந்திய அரசர் குழாத்துடனே அடைந்தான்.

பாரம்: அக்கரை. வேதபாரன்: வேதத்தின் கரையாகிய பொருளினை நன்கு உணர்ந்த விசுவாமித்திரன் என்க. “தவஞ் செய்வோர்கள் வெருவரச் சென்றடை காம வெகுளியெலாம்” (கம்ப. 324) வென்றவன் வசிட்ட பகவான் ஆதலின், “கோதில் சிந்தை வசிட்டன்” என்றார். காம, வெகுளிகளை வெல்லப் போராடி அரச குலத்துப் பிறந்து வேதபாரகனாய், முயற்சியால், “பிரம்ம இருடி” ஆனவன் ஆதலால் விசுவாமித்திரனை “வேதபாரகன்” என்றார். மாதர்கள் இந்நிலையில் வந்திட இராமன் தன் நிலையில் சற்றும் மாறாமல் பொருட்படுத்தாமல் போனான் என்பதனைத் தொனிப்பொருளாய் உணர்த்த, “மாதர் இந்நிலை எய்திட வள்ளல் போய்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the women fared like this, the generous one went on
  2. to the hall where Vacittaṉ of flawless mind and Kaucikaṉ,
  3. who had crossed to the far shore of the Vedas, were seated,
  4. and arrived there with the throng of weapon-bearing kings.

What the poem says

Leaving the love-struck women behind, untouched by them, Irāmaṉ reaches the great hall where the two sages await him, accompanied by the armed kings of his escort.

Vacittaṉ, the family priest of Irāmaṉ's line, has a mind free of flaw because he conquered lust and anger. Vicuvāmittiraṉ, here called Kaucikaṉ, was born a king and won the rank of brahmin sage by sheer effort, mastering the Vedas to their furthest shore.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātar iṉṉaṇam eytiṭa, vaḷḷal pōy,
kōtu il cintai vaciṭṭaṉum, kōcika
vēta pāraṉum mēviya maṇṭapam,
ēti maṉṉar kuḻāttoṭum eytiṉāṉ.