கம்பராமாயணம் 1187 · பால 19.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுழலும் வண்டும் மிஞிறும் சுரும்பும் சூழ்ந்து உழலும் - சுற்றிச் சுற்றி ஒலிக்கும் இயல்புடைய வண்டுகளும், அவற்றின் இனமான மிஞிறும் சுரும்புகளும் சுற்றித்திரிதலுக்கு இடமான; வாச மது மலர் ஓதியர் - நறுமணமும் தேனும் நிறைந்த மலர்களையுடைய கூந்தலுக்குரிய பெண்டிர்; குழலினோடு உறக் கூறு பல்லாண்டு ஒலி - புல்லாங்குழலோடு பொருந்துமாறு, (தசரத வேந்தனைப்) பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் (இசை) ஒலி; மழலையாழ் இசையோடு மலிந்த - அம்மகளிருடைய கொஞ்சு மொழிக்குச் சமமான யாழ் இசையோடு மிக்கு ஒலித்தன.
மிடற்றுக்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனும் இசைபிறக்கும் கருவி வகைகளின் இன்னொலியோடு வண்டினங்களின் ஒலியும், மகளிர் கூந்தலின் கொடையாகச் சேர்ந்து கொண்டன எனக் கூறியவாறு. மன்னனுக்குப் பல்லாண்டு (அஃறிணை) வண்டுகளும் பாடின என்று குறிப்பால் உரைத்தார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The women whose fragrant, honeyed flower-decked hair is circled
- by whirling bees, honeybees and dark bees,
- sang “Long may he live!” in time with the flute,
- and the sound swelled with the music of the lisping yāḻ.
What the poem says
The court women sing benedictions for Tacarataṉ, “many years to you,” accompanied by flute and the yāḻ, the old Tamil harp, whose notes are as soft as their own childlike voices.
All three kinds of musical instrument recognised in Tamil tradition are present: the voice, the wind instrument and the stringed instrument. To them is added the humming of the bees drawn to the women's flowers, as if even the bees were singing the king's praises.