கம்பராமாயணம் 1188 · பால 19.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெங்கண் ஆனையினான் தனி வெண்குடை - கொடுங்கண்களையுடைய யானைப்படைக்குரிய தசரத வேந்தனின் ஒப்பற்ற வெண்கொற்றக்குடை; திங்கள் - சந்திரன் ஆனவன்; தங்கள் குலக்கொடிச் சீதை ஆம் மங்கை - தம்குலத்தில் உதித்த மலர்க்கொடியனைய சீதையாகிய மகளின்; மாமணங்காணிய வந்து அருள் பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றது - சிறப்புக்குரிய திருமணத்தைக் கண்டுகளிப்பதற்காக வந்து கருணைமிக்குப் பூரித்து விளங்குவதைப் போன்றிருந்தது.
தண்மையினாலும் வெண்மையினாலும், வேந்தர்களின் கொற்றக்குடைகளைத் திங்களோடு உவமிக்கும் மரபு பற்றிக் கூறினும், சந்திர குல மங்கை மணம் காணக் குல முதல்வன் வந்தான் எனப் புதுச்சுவை சேர்ந்திருக்கும் திறம் காண்க. தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The single white parasol of the king of fierce-eyed elephants
- looked like the moon, come to see the great wedding of
- the girl Cītai, the vine-like jewel of their line,
- swelling and rising, brimming over with grace.
What the poem says
Tacarataṉ's white royal parasol is likened, as royal parasols conventionally are, to the cool white moon. The poet adds a fresh twist: Caṉakaṉ's family belongs to the lunar dynasty, so the moon, founder of that line, seems to have come in person, glowing with kindness, to watch his descendant Cītai's wedding.
This is the figure of fanciful causation, in which the poet assigns an imagined reason to a real sight.