கம்பராமாயணம் 1189 · பால 19.53

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊடு பேர்வு இடம் இன்றி - (இருந்த இடத்திலிருந்து) நிலை பெயர்ந்து நகர்தற்குரிய இடைவெளி சிறிதும் இன்றி; நீடு மாகடல் தானை நெருங்கலால் - நீண்ட பெருங்கடல் போன்று (தசரத வேந்தனின்) படைத்தொகுதி (அந்நாட்டிடம் முழுவதும்) நெருங்கிப் பரவி நிற்றலால்; ஆடல் மாமத ஆனைச் சனகர் கோன் நாடு எலாம் - வெற்றியினையே ஏந்தும் பெரிய மத யானைப்படைக்குரிய சனக மன்னனின் (விதேக) நாடு முழுவதும்; ஒரு நல் நகர்ஆயது - (சன நெருக்கம் மிக்க) ஒரே ஒரு நல்ல நகரமாக ஆய்விட்டது.

கவிஞர்பிரான் தன் கற்பனைத் திறத்தால், நாட்டை ஒரு நகரமாக்கி மகிழும் திறம் காண்க. போதுமான இடமின்றி நெருங்கியிருத்தலும், படைகள் மிக இருத்தலும் நகரத்தின் இயல்பாய் அன்றும் இருந்திருத்தல் காணலாம். நாட்டுப்புறம் இவையிரண்டுமின்றியிருத்தல் இன்றும் இயல்பாதல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the army, vast as the long sea, pressed in so close
  2. that there was no space left between to move, all of one piece,
  3. the whole country of the king of the Caṉakas, lord of great rutting war-elephants,
  4. became one fine city.

What the poem says

Tacarataṉ's army is so huge that it fills the entire kingdom of Caṉakaṉ with no room left to move. The whole countryside, packed with people and soldiers, has turned into a single city.

The commentary notes that crowding and the presence of troops were marks of a city then as now, which is what gives the image its point.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṭu pērviṭam iṉṟi oṉṟu ām vakai
nīṭu mākaṭal tāṉai neruṅkalāl,
āṭal mā mata āṉaic caṉakar kōṉ
nāṭu elām oru nal nakar āyatē.