கம்பராமாயணம் 1201 · பால 20.11

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தளை அவிழ் கோதை ஓதிச் சானகி தளிர்க்கை என்னும் முளரிகள் - இதழ்களின் கட்டவிழ்ந்த மலர்மாலைகளை யணியும் கூந்தலையுடைய சீதையின் தளிர் போன்ற மென்மையுடைய கைகள் ஆகிய செந்தாமரை மலர்கள்; இராமன் செங்கை முறைமையின் தீண்ட நோற்ற அளியன - இராம பிரானுடைய சிவந்த கைகளால் சாத்திர முறையின்படி தீண்டப்படுவதற்கு, தவம் (மிகக்) செய்துள்ளன, (இராமபிரானது) அன்புக் குரியன; கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு - (அத்தாமரைகள் இரவுப் பொழுதில் குவிந்தால் இராமபிரானது அன்பினையிழக்க நேருமோ என்று இரவுப் பொழுதிலும் அவை குவியாதிருக்க வேண்டும் என்று அக்கைகளிலே; இளவெயில் சுற்றியன்ன எரிமணிக் கடகம் இட்டார் - (சூரிய ஒளியிருப்பின் தாமரைகள் குவியா ஆதலால்) (கதிரவன்) இளவெயிலைச் சுற்றிக் கட்டினாற்போன்று ஒளிவிடும் பதுமராக மணிக்கற்கள் பதித்த கடகம் என்னும் அணியினைத் (தோழியர்) இட்டனர்.

இரவும் பகலும் குவியாத் தாமரைக் கைகளாகச் சீதை கரங்களை ஆக்கினர் என்க. இராமனைச் சூரியன் ஆகவும் சீதை கைகளைத் தாமரைகளாகவும் உருவகித்தார். கங்குற்போதும் குவியாத தாமரை - இல்பொருள் உவமை. கடகம் இருபாலர்க்கும் உரிய கையணி எனத் தெரிகிறது. “கங்கைக்கு இறைவன் கடகக்கை புடைத்து நக்கான்” (கம்ப. 1718) என இலக்குவனுக்கும் “கடகக்கை” கூறப்பெற்றிருத்தல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lotuses that are the tender hands of Cāṉaki, whose hair wears garlands of opening flowers,
  2. have done penance to be touched in due rite by Irāmaṉ's red hand and are dear to him;
  3. lest they should close even at night,
  4. they put on them bracelets of fiery gems, as if wrapping them in the morning sun.

What the poem says

Cītai's hands are lotuses that have earned, by penance, the right to be taken in Irāmaṉ's hand at the wedding rite. Lotuses close at night, so to keep them open always, her maids put ruby bracelets on her wrists, glowing like rings of early sunlight.

Irāmaṉ is the sun and her hands are the lotuses that open to him. A lotus that never closes, even at night, is another impossible comparison. The commentary notes that such bracelets were worn by men as well as women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḷai aviḻ kōtai ōtic cāṉaki taḷirkkai eṉṉum
muḷarikaḷ, irāmaṉ ceṅ kai muṟaimaiyiṉ tīṇṭa nōṟṟa,
aḷiyaṉa, kaṅkul pōtum kuviyala ākum eṉṟu āṅku
iḷa veyil cuṟṟiyaṉṉa, eri maṇik kaṭakam iṭṭār.