கம்பராமாயணம் 1207 · பால 20.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூஞ்சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப - அழகிய சுரும்புகளும், வண்டுகளும், மிஞிறுகளும், தும்பிகளும் மொய்க்குமாறு; சின்னப்பூ, செருகும் மென்பூ, சேகரப்போது, கோதுஇல் கன்னப் பூ கஞல - விடுபூவும், பின்னலில் செருகும் பூவும், தலைமுடி உச்சியிலே சூடற்குரிய பூவும், குற்றமற்ற காதுகளிலே வைக்கத்தக்க பூவும் (என்னும் இவற்றை) அங்கங்கே விளங்குமாறு வைத்து; மீது கற்பகக் கொழுந்து மான மின்ன - அவற்றின் மேலே, கற்பகவிருட்சத்தின் தளிர்கள் மின்னுவது போல மின்னுமாறு; புன்னைப் பூந்தாது மானும் பொற் பொடி அப்பிவிட்டார் - புன்னைமலர்களின் மகரந்தப் பொடிகளை ஒக்கின்ற பொற் பொடிகளை எடுத்துத் (தோழியர்) அப்பிவிட்டனர்.
சுரும்பு, வண்டு, மிஞிறு, தும்பி என்பவை வண்டின் இனங்கள். “காவில் வாழ்பவர் நால்வருளர்” (சீவக. 891) என்று தேவரும் கூறுவார். மான - ஒப்ப உவம உருபு. கஞலல் - ஒளிர்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Scattered flowers, soft flowers to tuck into the braid, blossoms for the crown of the head, and flawless
- flowers for the ears they set shining, and over them, glittering
- like young shoots of the wishing-tree, while bees, honeybees, dark bees and beetles swarmed,
- they dusted gold powder like the golden pollen of the puṉṉai flower.
What the poem says
Finally the maids dress Cītai's hair with flowers of every kind: loose blossoms, flowers tucked into the braid, a cluster at the crown and flowers at her ears. All four kinds of bee crowd round them. Over all this they sprinkle gold dust, fine as puṉṉai pollen, so that it gleams like the shining young leaves of the heavenly wishing-tree.