கம்பராமாயணம் 1208 · பால 20.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெய்வளர் விளக்கம் ஆட்டி - (அணிசெய்து முடித்த தோழியர் பிராட்டிக்குக் கண்ணேறு படும் என்ற) நெய் நிறைந்த விளக்கொளியைச் சுற்றிக்காட்டி; நீரொடு பூவும் தூவி - புனித நீரினோடு கூடிய பூக்களையும் முன்னால் இறைத்து; தெய்வமும் பராவி வேத பாரகர்க்குச் செம்பொன் ஈந்து - தெய்வத்தினையும் வழிபட்டு வேதங்களைக் கரைகண்டறிந்த அந்தணாளர்க்குச் செம்பொன் தானம் அளித்து; ஐயவி நுதலில் சேர்த்தி, ஆய்நிற அயினிசுற்றி - சிறுவெண் கடுகின் பொடிகளை நெற்றியில் தீற்றி, ஆராய்ந்தெடுத்த செந்நிற ஆலத்தி நீரைச் சுழற்றி; கைவளர் மயில் அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் - கைகளினால் எடுத்து வளர்க்கப்பட்ட மயிலைப் போன்ற பிராட்டியை வலப்புறஞ் சுற்றிக் காப்பு நாணையும் இட்டனர்.
அயினி - செஞ்சோறு. ஆகு பெயராய் அதனோடு சேர்ந்த ஆலத்தி மஞ்சள் நீரையும் குறித்தது. வெண்சிறு கடுகினை அப்புதல் தொல் மரபு. கானில் வளர்கின்ற மயில்கள் உண்டு; இது, சனகன் கரங்களில் வளர்ந்த மயில் என்பார், “கைவளர் மயில் அன்னாளை” என்றார். கண்ணேறு கழிக்கும் பழைய மரபினைத் தொகுத்து உரைத்தவாறு. ஆலத்தி நீரில் கையைத் தோய்த்து நெற்றியில் அதைக் கொண்டு பொட்டிடுதலைக் காப்பிடுதல் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They waved a lamp brimming with ghee, scattered flowers with water,
- worshipped the gods, gave red gold to the masters of the Veda,
- put white mustard on her brow, circled her with the red ārati water,
- walked round the peacock-like girl reared in their hands, and tied on a protective thread.
What the poem says
With Cītai fully dressed, her maids perform the old rites to ward off the evil eye: they wave a ghee lamp before her, scatter flowers and water, pray to the gods, give gold to the Vedic priests, dab white mustard on her forehead, circle her with a dish of red turmeric water, walk around her and tie on a protective thread.
She is called a peacock raised by hand: other peacocks grow up wild in the forest, but this one was raised in Caṉakaṉ's own arms.