கம்பராமாயணம் 1212 · பால 20.22

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் - பரவின மேகலையாகிய இடையணியும், பாத சாலகம் எனும் காலணியும்; நாக சிரம் செய் நூபுரமும் - பாம்பின் தலைவடிவில் முகப்புடைய நூபுரம் என்னும் காலணியும்; வண்டும், சிலம்பொடு சிலம்பி ஆர்ப்ப - கைவளையல்களும், காற்சிலம்பும் ஒலித்து ஆரவாரமுண்டாக்க; புரந்தரன் கோல் கீழ் ஆனோர் அரம்பையர் புடை சூழ்ந்து என்ன - இந்திரன் ஆட்சிக்குட்பட்ட அரம்பை முதலிய தேவப் பெண்கள் பக்கங்களில் சூழ்ந்துவந்தாற் போல; வரம்பு அறு சும்மைத் தீம் சொல் மடந்தையர் மருங்கு சூழ்ந்தார் - அளவு கடந்தவர்களாய், இனிய ஒலிக் குதலைச் சொல்லினராய், தோழிப் பெண்கள் பலர், பிராட்டியின் மருங்கே இடையீடின்றிச் சூழ்ந்து சென்றனர்.

பாத சாலகம், நூபுரம், சிலம்பு - கால் அணி இனங்கள். வண்டு - கைவளை. அணிகளின் இன்னொலியும், அணியிழையார் இன்னொலியும் சூழப் பிராட்டி சென்றாள் என்றவாறு. சிலம்புதல் - ஒலித்தல். சிலம்பு - ஒலித்தல் காரணமாக வந்தபெயர் இங்கு. சிலம்பின் பெயர்க் காரணம் அறிவிப்பார் போல, “சிலம்பொடு சிலம்பி” என்றார். “சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப” (சீவக. 20/9) என்பார் திருத்தக்க தேவரும். சும்மை - ஒலி. சிலம்பும் நூபுரமும் தனித் தனிக் காலணிகள் என்பது, “நூபுரம் புலம்பிடச் சிலம்பு நொந்தழ” (கம்ப. 9931) எனும் இடத்தால் உணரலாம். நூபுரம் - பாத தண்டை எனக் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With spreading girdles, linked foot-chains, anklets
  2. with serpent-head clasps and bangles all jingling together with the anklet rings,
  3. as the heavenly nymphs under Intiraṉ's rule throng around a queen,
  4. countless maidens with sweet, babbling speech followed and surrounded her.

What the poem says

Cītai sets out for the hall, surrounded by a crowd of maidens chattering sweetly, like the nymphs of Intiraṉ's heaven around their queen. Their girdles, foot-chains, serpent-headed anklets, bracelets and ankle rings all ring out together.

The commentary notes that the word cilampu, anklet, comes from a verb meaning “to ring,” and the poet seems to point this out by setting the two side by side.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paranta mēkalaiyum, kōtta pāta cālakamum, nākac
ciram cey nūpuramum, vaṇṭum, cilampoṭu cilampi ārppa,
purantaraṉ kōṟkīḻ āṉōr, arampaiyar puṭai cūḻnteṉṉa,
varampu aṟu cummait tīm col maṭantaiyar toṭarntu cūḻntār.