கம்பராமாயணம் 1215 · பால 20.25

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொழும் தகைய மெல் நடை தொலைந்து களி அன்னம்,
எழுந்து இடை விழுந்து அயர்வது என்ன, அயல் எங்கும்
கொழுந்து உடைய சாமரை குலாவ, ஒர் கலாபம்
வழங்க நிழல், மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள்.

பொருள் · Meaning in Tamil

களி அன்னம் - (தனக்குச் சமமாக நடக்க எண்ணி உடன்வந்த) களிப்புடைய அன்னங்கள்; தொழும் தகைய மென்நடை தொலைந்து இடை விழுந்து அயர்வது என்ன - யாவராலும் தொழத்தக்க மென்மையான (தனது) நடைக்குத் தோற்றுப்போய்; இடையிடையே கீழே வீழ்ந்தும், (முயன்று மீண்டும்) எழுந்தும் வருந்துவதுபோல; கொழுந்துடைய சாமரை அயல் எங்கும் குலாவ ஓர்கலாபம் நிழல் வழங்க மின்னவரும் மஞ்ஞை என வந்தாள் - தன் இருமருங்கும், நுனிசீர்த்த சாமரைகள் சுழல, ஒப்பற்ற (கலாபம்) ஒளி வீச மின்னிக் கொண்டுவரும் ஒரு மயில்போலப் (பிராட்டி) (மண்டபம் நோக்க) வந்தாள்.

வெள்ளை நிறச் சாமரங்கள், கீழும் மேலுமாக வீசப்படல், அன்னம் சீதையின் அழகுநடைக்குத் தோற்று விழுவதும் எழுவதும் போல இருப்பதாகக் கற்பித்தவாறு. தற்குறிப்பேற்ற அணி. இரட்டுற மொழிதலாக மயிலுக்குக் கலாபம் தோகையினையும், சீதைக்குக் கலாபம், இடையணியினையும் குறித்துத் தோகை ஒளிர மயில் ஒன்று வருவது போன்று வந்தாள் பிராட்டி என்க; அவள் நடைக்கும் விழுந்தும் எழுந்தும் அடித்துக் கொண்டோடும் அன்னங்கள் போல் வெண்சாமரம் இரட்டப் பிராட்டி வந்தாள் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if proud swans, beaten by her soft gait worthy of worship,
  2. kept rising and falling between and tiring themselves out, so all about her
  3. the plumed fly-whisks waved; and like a peacock that comes
  4. flashing as its spread tail gives off its light, she came.

What the poem says

White fly-whisks rise and fall on either side of Cītai as she walks. The poet imagines them as swans that tried to keep pace with her graceful walk, were beaten, and keep stumbling and getting up again.

She herself is a peacock with its tail spread. The word kalāpam means both a peacock's tail and a jewelled girdle of many strands, so it fits the bird and the bride at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toḻum takaiya meṉ naṭai tolaintu kaḷi aṉṉam,
eḻuntu iṭaiviḻuntu ayarvatu eṉṉa, ayal eṅkum
koḻuntuṭaiya cāmarai kulāva, or kalāpam
vaḻaṅku niḻal, miṉṉa varum maññai eṉa vantāḷ.