கம்பராமாயணம் 1216 · பால 20.26

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் - பூவுலகம் முதலான எல்லாவுலகிலும் உள்ள பெண்டிர் அனைவர்க்கும்; கண்மணி எனத் தகைய கன்னி எழில் காண - கண்ணின் உள்ளே உள்ள கருமணி போன்ற அருமையுடைய கன்னியாகிய பிராட்டியினது அழகைக் காண்பதற்காக; அண்ணல் மரபின் சுடர் - (இவள் கொழுநனாகவுள்ள) இராமபிரானது குலத்துக்கு ஆதிபுருடனான சூரியன்; அருத்தியொடு தான் அவ் விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் - மிக்க விருப்பத்தோடு, தான் அந்த விண்ணிலிருந்து இறங்கி வந்திருப்பதைப் போன்ற தன்மையதான பேரொளியுடைய ஒரு மேற்கட்டியின் நிழலில் சீதை வந்தடைந்தாள்.

சூரியன் தன் குலக் கொழுந்தாவான் வாழ்க்கை சிறக்க வந்தடைகிற கன்னி ஆகிய மணம் பெண்ணை, மூத்தான் காண விரும்புவது இயல்பாதல் பற்றிக் கதிரவன் மேலும் அவ்விருப்பை ஏற்றிக் கூறினார். தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if, to see the beauty of the maiden who is the very pupil of the eye
  2. among the women of all the worlds, starting with the earth,
  3. the light of the lord's own line, the Sun, had eagerly
  4. come down from the sky, she came beneath a canopy like that.

What the poem says

Cītai walks under a dazzling jewelled canopy. The poet imagines it is the Sun himself, founder of Irāmaṉ's solar dynasty, who has come down from the sky out of eagerness to see the bride who will marry into his family, as an elder of the house naturally longs to see a new daughter-in-law.

She is the pupil of the eye, the most precious thing, among the women of every world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇ mutal aṉaittu ulakiṉ maṅkaiyaruḷ ellām
kaṇ maṇi eṉat takaiya kaṉṉi eḻil kāṇa,
aṇṇal marapil cuṭar aruttiyoṭu, tāṉ av
viṇ iḻivatu oppatu or vitāṉa niḻal vantāḷ.