கம்பராமாயணம் 1217 · பால 20.27

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கற்றை விரி பொன் கடை மயிர்த் துறு கலாபம்
சுற்றும் மணி புக்க இழை, மிக்கு இடை துவன்றி,
வில் தவழ, வாள் நிமிர, மெய் அணிகள் மின்னச்,
சிற்றிடை நுடங்க, ஒளிர் சீறடி பெயர்த்தாள்.

பொருள் · Meaning in Tamil

கற்றை விரி பொற் கடை பயிற்றுறு கலாபம் - ஒளிக்கதிர்கள் விரிகின்ற பொன்னைக் கடைந்ததனால் எழுகின்ற ஒளி மிகும் பதினாறு கோவையணியும்; இடை சுற்றும் மணிபுக்க இழை மிக்கு, துவன்றி - (தன்) இடையைச் சுற்றிலும் மணிகள் இழைக்கப்பட்டுள்ள மற்றை அணிகலன்களும் மிகுந்து நெருங்கி; வில் தவழ, வாள் நிமிர மெய் அணிகள் மின்ன - அவற்றின் ஒளி எங்கும் பரவவும், (நடுவில்) தன்மேனி ஒளி விளங்கவும், தன் உடலில் அணிந்துள்ள பிற அணிகள் மின்னிடவும்; சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள் - (அணி கலங்களின் பாரத்தால்) நுண்ணிய இடை வருந்த, ஒளி மிகும் தன் சிறிய பாதங்களை எடுத்து வைத்தாள்.

அரச குடும்பத்தினர் செல்லுங்கால், விற்படையும் வாட்படையும் ஏந்தி மெய்காவலர் உடன் சூழச் செல்லும் மரபு தோன்ற, “வில் தவழ, வாள் நிமிர, மெய் அணிகள் மின்னச் - சிற்றடி பெயர்த்தாள்” எனச் சீதை நடந்ததை நயந்தோன்றக் கூறினார். வில், வாள், மின் முதலிய ஒளி வெள்ளங்கட்கிடையே வந்தாள் என்பதனால், பிராட்டி உலகச் சோதியாக விளங்கினாள் எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With her many-stranded girdle of beaten gold spreading its rays,
  2. and gem-set ornaments crowding thick around her waist,
  3. as their light spread like a bow, her radiance rose like a sword, and the jewels on her body flashed,
  4. her little waist swaying, she moved her shining little feet forward.

What the poem says

Cītai steps forward, her slim waist bending under a sixteen-strand golden girdle and other jewels. Their light ripples out, her own radiance rises above it, and her ornaments flash.

The words for light here, vil and vāḷ, also mean “bow” and “sword,” so the line can also be read as bows and swords around her and her bodyguard about her, as befits a royal procession. Either way she walks as the light of the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟṟai viri poṟkaṭai payiṟṟuṟu kalāpam
cuṟṟum maṇi pukka iḻai, mikku iṭai tuvaṉṟi,
vil tavaḻa, vāḷ nimira, mey aṇikaḷ miṉṉa,
ciṟṟiṭai nuṭaṅka, oḷir cīṟaṭi peyarttāḷ.