கம்பராமாயணம் 1219 · பால 20.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சமைத்தவரை இன்மை மறைதானும் எனலாம் - இயற்றியவர் இன்னார் என்று சொல்ல இயலாமையால், வேதத்தின் வடிவம்தான், இவள் என்று சொல்லத்தக்க; அச்சுமைத்திரள் முலைத் தெரிவை தூய்வடிவு கண்டார் - கனந்திரண்ட தனங்களையுடைய அப்பிராட்டியினுடைய தூய திருமேனியைக் கண்டு; அமைத்திரள் தோளியரும் ஆடவரும் எல்லாம் - (இள) மூங்கில் போன்று திரண்ட தோள்களையுடைய பெண்டிரும், ஆண்களும் ஆகிய அனைவரும்; சித்திரம் எனத் தாம் இமைத்திலர்; உயிர்த்திலர்கள் - (மிகுந்த வியப்பால் திகைப்புற்ற) ஓவியப் படிவங்களைப் போன்று இமைக்கவும் இல்லை; மூச்சு விடவும் இல்லை.
கண்டார் - முற்றெச்சம். வேதம் இறைவனால் வெளியிடப் பட்டதன்றி, ஒருவராலும், உண்டாக்கப்பட்டதில்லை. அதுபோல, பிராட்டியும் சனகரால் எடுத்து வளர்க்கப்பட்டவளே அல்லாமல் பெற்று வளர்க்கப்பட்டவள் அல்லள் (அயோநிஜ) என்று உவமை கொண்டு விளக்கியவாறு. ஒரு புருடரால் செய்யப்படாமை பற்றி, வேதம் “அபௌருஷேயம்” எனப்படும். பிராட்டியின் தூய வடிவு அனைவரையும் பெருவியப்பில் ஆழ்த்தி, ஆடாமல் அசையாமல் உயிர்க்கவும் செய்யாமல் ஓவியம் ஆகிற்று என்பதாம். “ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்” (கம்ப. 1508) என்பார் மேலும். பால் வேறுபாடின்றி, எல்லோரையும் செயல் இழக்கச்செய்யும் தெய்விகப் பேரழகு பிராட்டியினுடையது என உணர்த்தியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She who could be called the Veda itself, since there is none who made her:
- seeing the pure form of that maiden with full, heavy breasts,
- all of them, women with shoulders like rounded bamboo and men alike,
- did not blink, did not breathe, but stood like pictures.
What the poem says
Everyone in the hall, men and women alike, stares at Cītai without blinking or breathing, frozen like figures in a painting.
She is compared to the Veda, which tradition holds was composed by no author. Likewise Cītai was not born of any father and mother: Caṉakaṉ found her in the earth and raised her. Her beauty is divine and stills every onlooker, whatever their sex.