கம்பராமாயணம் 1220 · பால 20.30

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கன்னி அமிழ்தத்தை எதிர்கண்ட கடல் வண்ணன் - அமிழ்த மயமானதொரு கன்னிகை போன்ற சீதையைக் கண் எதிரிலே கண்ட கடல் போன்ற நிறத்தனான இராமபிரான்; அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் - அந்தச் சனக மன்னன் திருமகளை, (தான் கன்னிமாடத்தருகே கண்ட) அம்மங்கை யல்லளோ என்றும், அம்மங்கையே ஆவாளோ என்றும், உண்டான ஐயமுடையவனாய் (இருந்த ஐயம் நீங்கி, அவளே இவள் என்று அறிந்த மகிழ்ச்சியினால்); உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து - மதித்தற்குரிய உயிர், (என்றும்) உடலில் நிலைத்திருக்கவேண்டிய விருப்பத்தினால் மிகப்பாடுபட்டு, (அதன் பயனாய்); ஆண்டு இன்னமிழ்து எழக் களி கொள் இந்திரனை ஒத்தான் - அக்கடலிடத்தே இனிய அமிழ்தம் எழுவதைக்கண்டு களிகூர்ந்த தேவேந்திரனைப் போன்றவன் ஆனான்.

இராமனை “அல்லன் கொல், ஆம்கொல்” என்று சீதை ஐயுற்றுத் தவித்தது கோலங்காண்படலத்தில் (கம்ப.) கூறப்பட்டது. கன்னிமாடத்துக் கண்டவளே இவள் என இராமன் இங்கு ஐயம் தீர்ந்தான்; கன்னிமாடத்தருகில் கண்டவனே இவன் எனச் சீதை “எய்யவில் வளைத்தும்” (கம்ப. 1151) எனும் பாடலில் ஐயந்தீர்வாள். கடலிற் பிறந்த அமிழ்தத்தை மீண்டும் ஒருமுறை அக்கடல் கண்ணுற்றது என்பார், “கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்” என்றார். கடலில் எழுந்த அமிழ்தம் என்றார். பிராட்டிக்கு அமிழ்தம், பாற்கடலில் தோன்றியதாலும், அனைவராலும் விரும்பப் படுதலாலும், இன்பம் விளைத்ததாலும், மரணத்தைத் தவிர்ப்பதாலும் உவமை என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wondering of her, “Is it not she? Yes, it is she,”
  2. the one coloured like the sea, seeing the maiden-nectar face to face,
  3. was like Intiraṉ who, longing that life might last, toiled
  4. there and rejoiced when the sweet nectar rose.

What the poem says

Irāmaṉ, dark as the ocean, sees Cītai close up and at last is sure: she is the girl he glimpsed from the street below her balcony. His joy is like that of Intiraṉ and the gods, who churned the ocean, longing for immortality, and rejoiced when the nectar of life finally rose from it.

The image is apt because Cītai, as the goddess Tirumakaḷ, herself rose from that churned ocean, and here the ocean-coloured Irāmaṉ sees her rise before him once more. Cītai's own doubt about him will be resolved a few verses later.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavaḷai, allaḷ eṉa, ām eṉa ayirppāṉ,
kaṉṉi amiḻtattai etir kaṇṭa kaṭal vaṇṇaṉ
uṉ uyir nilaippatu or aruttiyoṭu, uḻaittu āṇṭu,
iṉ amiḻtu eḻak kaḷi koḷ intiraṉai ottāṉ.