கம்பராமாயணம் 1228 · பால 20.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யாறு நிறை - கருத்து நீண்ட கண்ணின் கடைப் பகுதியிலிருந்து இராமனை நோக்கிப் பாய்ந்த ஒளிவெள்ளம் ஆகிய ஆறு; கண்ணம் பெருங்கடலின் மண்ட - இராமபிரானின் மேனி யென்னும் கடலிற் போய்ச் சங்கமிக்க; உயிர் பெற்று - ஐயம் அனைத்தும் நீங்கி, கன்னி மாடத்தில் கண்டவனே இவன் என்னும் துணிவால், (ஊசலாடிய உயிர்) புத்துயிர்ப்பெய்தி; இனிது உயிர்க்கும் - வெய்துயிர்த்தல் நீங்கி, இனிமை தவழும் மூச்செறிந்தாள்; அருங்கலன் அணங்கு அரசி - பிறர்க்கு அரிய அணிகலன்களை யணிந்துள்ள தெய்வமங்கையாகிய சீதை; ஆர்அமிழ்து அனைத்தும் ஒருங்கு உடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் - (பேருவகையால்) பெறுதற்கு அரிய அமிர்தம் முழுவதையும் (தாமே) உண்டவரைப் போன்று உடம்பு பூரித்தாள்.
இராமனின் திருமேனி, பிராட்டிக்குக் கடலுமாயிற்று, அதிற் பிறந்த அமிழ்தும் ஆயிற்று. ஆகவே, இராமன் திருமேனி, பிராட்டிக்கு “திருக்கண்ணமுது” ஆயிற்று என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the river of light from her long, dark-cornered eyes, filling full,
- poured into the great sea of Kaṇṇaṉ, she came back to life and breathed sweetly;
- that queen of goddesses, wearing rare jewels, like one who had drunk
- all the precious nectar at a single draught, swelled in body with joy.
What the poem says
Cītai's sidelong glance is pictured as a river of light flowing from the corner of her eye into the ocean that is Irāmaṉ's dark body (he is Kaṇṇaṉ, Viṣṇu). With every doubt gone, her life, which had been hanging in the balance, returns; her anxious sighs give way to easy breathing.
Since the nectar of immortality was churned from the ocean, the poet can make Irāmaṉ both the sea she flows into and the nectar she drinks. She glows and fills out with joy, like someone who has drunk all of it at once.