கம்பராமாயணம் 1229 · பால 20.39

Section பால காண்டம் / 20. கோலங்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்
வணங்கு வில் இறுத்தவன் எனத் துயர் மறந்தாள்.
அணங்கு உறும் அவிஞ்சை கெட, விஞ்சையின் அகம்பாடு
உணர்ந்து, அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள்.

பொருள் · Meaning in Tamil

கணங்குழை - திரண்டு ஒருங்கிருந்த குழைகளையுடைய சீதை; கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான் வணங்குவில் இறுத்தவன் - தான் கன்னிமாடத்திலிருந்து கண்ட நாள் முதலாகத் தன் மனத்துள்ளே தங்கிய கள்வனாயிருந்த அவனே வளையும் வில்லை முறித்தவனானான்; எனத் துயர் மறந்தாள் - என்று (ஐயத்திற்கிடமின்றி அறிந்து) (முன்பு தான் கொண்டிருந்த ஐயத்தாலான) துயரம் முழுவதையும் மறந்தவள் ஆனாள்; அணங்குறும் அவிச்சை கெட - (பிறவித்) துன்பம் அடைவதற்குக் காரணம் ஆன (ஒன்றை இன்னொன்றாக உணரும்) விபரீத உணர்வு அழிந்தவுடன்; விச்சையின் அகம்பாடு உணர்ந்து - தத்துவ அறிவு எழுவதால், கிட்டும் உண்மை ஞானத்தால்; மனத்தில் வாழும் பரம்பொருளை அகக் கண்ணால் கண்டுணர்ந்த பின்பு; அறிவுமுற்று பயன் உற்றவரை ஒத்தாள் - முற்றறிவால் எய்தும் (முத்திப்) பயனாம் அந்தமில் இன்பத்தை அடைந்தவரைப் போன்றவளானாள்.

இம்மூன்று பாடல்களாலும், “வில் ஒடித்தவனே அன்று கண்ட வீரன்” என்று ஐயமின்றி அறிந்ததனால் எழுந்த சீதையின் உள, உடல் விகசிப்பையே கூறிச் சீதை மகிழ்வதாகக் கவிஞர் மகிழும் திறம் உணர்க. வேற்றவன் ஆனால், சீதை கொண்ட முதற்காதல் முழுதும் பழுதாகும் என்று அவள் தவிப்பை வெளிப்படுத்தி, சீதையின் தகவை வெளிப்படுத்தியவாறு. “சொல்லிய குறிப்பின் அத்தோன்றலே; அவன் அல்லனேல் இறப்பன்” (கம்ப. 728) என அவள் கூற்றையும் உணர்க. தன்னை யுணர்ந்து, தலைவனையறிய உதவும் மெய்ஞ்ஞானம் தலைப்பட்டவர் பேரா இன்பம் பெறுகுவர். அவ்வின்பம் பெறத் தடையாயுள்ள மயக்க அறிவு நீங்கியவுடன் தன்னையறிந்து தலைவனை உணரும் நிலைகூடும்; அப்போது அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் கூடும் என்பது பின் இரண்டடியின் கருத்து. இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சியவர்க்கு (352) என்பார் திருவள்ளுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She of the clustered earrings, knowing that the thief who dwelt in her thoughts
  2. was the one who broke the bending bow, forgot her sorrow;
  3. she was like those who, when the ignorance that brings suffering is destroyed,
  4. grasp the inner truth of wisdom and reach the full fruit of knowledge.

What the poem says

This is the last of three verses on Cītai's relief. The 'thief' who stole into her heart when she saw him from the palace balcony is the very man who broke the bow. Had it been anyone else, her first love would have been ruined; earlier she had resolved to die if it were not he.

The second half is a philosophical simile. When delusion, the false knowledge that mistakes one thing for another, is destroyed, the seeker realises the Supreme dwelling within and attains endless bliss. Cītai's sorrow vanishes in the same way. The commentary cites Tirukkuṟaḷ 352: for those of clear vision freed from delusion, darkness departs and joy arises.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇaṅ kuḻai karuttiṉ uṟai kaḷvaṉ eṉal āṉāṉ
vaṇaṅku vil iṟuttavaṉ eṉat tuyar maṟantāḷ.
aṇaṅkuṟum aviccai keṭa, viñcaiyiṉ akampāṭu
uṇarntu, aṟivu muṟṟu payaṉ uṟṟavarai ottāḷ.