கம்பராமாயணம் 123 · பால 3.42

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆய்ந்த மேகலையவர் - நுட்ப வேலைப்பாடு அமைந்த மேகலை அணிந்த மகளிர்; அம்பொன் மாளிகை வேய்ந்த - தமது கூந்தலுக்கு மணமூட்ட, மாளிகைகளிலே எழுப்பிய; கார் அகில் புகை உண்ட - கரிய அகிற் புகையை உண்ட; மேகம் போய்த் தோய்ந்த - மேகங்கள் சென்று படிந்த; மா கடல் நறும் தூபம் நாறு மேல் - அந்தப் பெரிய கடலும் அகிலின் நறுமணம் கமழும் என்றால்; பாய்ந்த தாரையின் நிலை - மேகங்களிலிருந்து கீழே விழும் மழைத்தாரையின் தன்மையை, பகரல் வேண்டுமோ - அதுவும் அகில் மணம் கமழ்கிறது எனச் சொல்லவா வேண்டும்?

மகளிர் எழுப்பிய அகில் புகையை உண்ட மேகங்கள் கடலில் படிவதால் கடலும் அகில் மணம் வீசுகிறது. மேகத்திலிருந்து கீழே விழும் மழைத் தாரை மணம் கமழ்வதைச் சொல்ல வேண்டுமோ என்பது கருத்து. இது தொடர் நிலைச் செய்யுட் பொருட் பேரணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If the clouds that drank the dark aloe-smoke rising
  2. from the lovely golden mansions of women with finely wrought girdles
  3. go and settle on the great sea, and the sea itself smells of fragrant incense,
  4. need one even speak of the rain that pours from them?

What the poem says

The women of Ayōttī perfume their hair with smoke from burning aloe-wood. The smoke rises from the mansions and is soaked up by the clouds.

When the clouds settle on the ocean, even the ocean smells of incense. It goes without saying that their rain is fragrant too. The argument moves from the greater case to the lesser.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āynta mēkalaiyavar am poṉ māḷikai
vēynta kār akil pukai uṇṭa mēkam pōyt
tōynta mā kaṭal naṟun tūpam nāṟumēl,
pāynta tāraiyiṉ nilai pakaral vēṇṭumō?