கம்பராமாயணம் 1242 · பால 21.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இருளானது தான் - (இங்குச் சூழ்ந்துள்ள) இருள் என்று சொல்லப்படுவதுதான்; தெருளா வினை தீயவர் சேர் நரகோ - தெளிவற்ற பாவச் செயல்களைச் செய்வார் சென்றடையும் நரகமே தானோ? (இந்த இருளில்); அவா அதுவோ அருளான் நெறி ஓடும் - என்னுடைய காதல் வேட்கையோ, என்னிடம் இன்னும் அருள் காட்டாதவனாகிய இராமன் இருக்கும் இடமே நோக்கி ஓடுகின்றது; கருள் சேர் கடலோ? - (விடிந்தால் அவனை அடையலாம் எனில்) (இந்த இரவோ கருமை நிறைந்து (எல்லையற்றதாதலின் கடல் என முன்நிற்கிறது); கரை காண்பு அரிதால் - (இவ்விரவு எனும் கடல் மெல்லியலாள் ஆகிய நான்) நீந்திக் கடந்து கரை காண்பதற்கும் அரிதாகிறது; எனை ஊழி கொல் ஆம்? - எத்தனை ஊழிக்காலம் சேர்ந்து (இந்த ஓர் இரவு) ஆகியுள்ளது?
பிரிவில் தவிப்பார்க்கு ஒரு நொடியும் ஒரு யுகமாகத் தோன்றும் ஆதலால் “எனை ஊழி கொலாம்” என்று பிராட்டி தவித்தனள் என்க. எனை - எத்தனை. “ஒருநாள் எழுநாள் போல் செல்லும் சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு” (திருக். 1269) எனும் கூற்றையும் ஒப்பிடுக. கடல் நீந்தற்கு அரியது என்பாள் “இருள் கருள் சேர் கடல்; கரை காண்பு அரிது” என்றாள். “காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன்; யாமத்தும் யானேயுளேன்” (திருக். 1167); “இன்பம் கடல் மன்னும் காமம்; அஃது அடுங்கால், துன்பம் அதனில் பெரிது” (திருக். 1166).
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is it the hell where evil-doers go for deeds done without discernment?
- Is it my longing, running down the path of the one who shows me no grace?
- Is it a sea full of darkness, since its shore is so hard to see?
- This thing called darkness: how many ages long can it be?'
What the poem says
Cītai's lament continues. She tries to name the darkness that surrounds her. Is it the hell of sinners? Is it her own desire, running off towards the man who has not yet shown her his favour? Is it a black ocean, too wide for a weak woman to swim across?
How many aeons make up this one night? For someone parted from a lover, a moment feels like an age. The commentary cites Tirukkuṟaḷ verses on the same feeling: one day passes like seven for those waiting for an absent lover's return, and the flood of desire has no shore.