கம்பராமாயணம் 1251 · பால 21.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கல் ஆர் மலர்சூழ் கழி, வார் பொழிலோடு - செய்குன்றுகளும், நிறைந்தமலர் சூழ்ந்த உப்பங்கழிகளும், நீண்ட மலர்ச் சோலைகளும் விளையாடும்; எல்லாம் உள ஆயினும் - மற்றும் பல ஆடிடங்களும் இடங்களாக இருக்கவும்; சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம் - பேசும் சொற்களைப் பெறுதற்கரிய அமுதச் சுவையினும் இனியவாகப் பேசுகின்ற; மெல் ஓதியர்தாம் விளையாடு இடம் - மெல்லிய கூந்தலையுடைய அப்பெண்டிர் விளையாடும் இடமாகக் கொண்டது; என் மனமோ - என் மனந்தானோ?
உயர்பண்புடைய மகளிர் தலைவனது நெஞ்சினையே விளையாடுகளமாகக் கொள்வர். ஓயா நினைவில் அவர் உள்ளத்துலாவுதலால் விளையாடிடம் ஆயிற்று நெஞ்சம் என்க. மலைச் சோலை, கழிக்கானல், மலர்ப் பூங்கா எனப் பலப்பல ஆடிடங்கள், அரசிளங் குமரியாகிய அவளுக்கு விளையாடக் காத்திருக்க, என் மனத்தை ஏன் அவள் ஆடுகளமாகத் தேர்ந்தாளோ என வியந்தவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though there are hills, and backwaters ringed with flowers, and long groves,
- and every other place there is, is it my mind
- that the soft-haired one, whose words are sweeter
- than the taste of nectar, has made her playground?'
What the poem says
Irāmaṉ's last lament. A princess like Cītai has every pleasure ground she could want: artificial hills, lagoons fringed with flowers, long garden groves. Why, of all places, has the girl whose speech is sweeter than nectar chosen his mind to play in?
She is in his thoughts all the time, running about there as if it were her garden. With this the night scene ends, and the poem turns to the preparations for the wedding.