கம்பராமாயணம் 1258 · பால 21.25

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தளம் கிளர் மணி காலத் தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும்,
விளிம்பு பொன் வகை நாற வெயிலொடு நிலவு ஈனும்
பளிங்கு உடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும்.

பொருள் · Meaning in Tamil

விளிம்பு பொன் விரை நாற - ஓரங்கள் எல்லாம் பொன் பதிக்கப் பெற்றுள்ள பொன் தகடுகள் மணம் கமழ; வெயிலொடு நிலவு ஈனும் - ஞாயிற்றின் வெப்பமும், நிலவின் தண்மையும் ஒருங்கே உமிழும் (சூரிய, சந்திர காந்தக் கற்கள்) என்னும்; பளிங்குடை உயர் திண்ணைப் பத்தியின் - படிகக் கற்கள் பதிக்கப்பெற்ற உயர்ந்த திண்ணைகளின் வரிசைகளில்; தளம் கிளர் மணி கால - அடித்தளத்தில் பதிக்கப் பெற்றுள்ள மாணிக்கங்கள் ஒளிசிந்தவும்; தவழ் சுடர் உமிழ்தீபம் - பரவுகின்ற ஒளி உமிழ்கின்ற தீபங்களையும்; குளிர் இளமுளை ஆர் நல் பாலிகை இனம் - குளிர்ந்த இளமையான விதைமுளைகள் பொருந்தின நல்ல பாலிகைக் கிண்ணங்களின் வகைகளையும்; எங்கும் வைப்பாரும் - (அந்நகரத்தில்) எவ்விடத்திலும் வைப்பாரும் (ஆயினர்).

சூரிய ஒளியில் வெயிலும், சந்திர ஒளியில் தண்ணீரும் உமிழ்வது சூரிய காந்தக் கல், சந்திரக்கல் எனும் இரண்டின் இயல்பாதலின், அவை இரண்டும் பதிக்கப்பெற்ற திண்ணைகளில் “வெயிலொடு நிலவு ஈனும்” எனப்பட்டன. சுடர் என்பது மணித் தீபத்தையும், உமிழ் தீபம் என்பது, தீச்சுடர் விளக்குகளையும் குறித்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Lamps pouring out a spreading light, as gems glowed from the floors,
  2. and everywhere sets of fine bowls full of cool young sprouts,
  3. on the rows of high crystal verandas, rimmed with fragrant gold,
  4. that give off both sunshine and moonlight: some set these out.

What the poem says

People set out lamps and pālikai bowls, shallow pots of freshly sprouted seedlings that are an auspicious part of a Tamil wedding, all along the raised verandas in front of the houses.

The verandas are faced with crystal, edged with gold and set with sunstones and moonstones. The sunstone was believed to give off heat in sunlight and the moonstone to give off cool water in moonlight, so the verandas 'yield both sunshine and moonlight', while gems in the floor add their own glow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḷam kiḷar maṇi kālat tavaḻ cuṭar umiḻ tīpam,
iḷaṅ kuḷir muḷai ār nal pālikai iṉam eṅkum,
viḷimpu poṉ virai nāṟa veyiloṭu nilavu īṉum
paḷiṅkuṭai uyar tiṇṇaip pattiyiṉ vaippārum.