கம்பராமாயணம் 1259 · பால 21.26

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மந்தரம் மணி மாடம் முன்றிலின் வயின் எங்கும்
அந்தம் இல் ஒளிர் முத்தின் அகல் நிறை ஒளி நாறி,
இந்திரன் நெடு வானம் ஈன் அலர்குவது என்னப்,
பந்தரின் நிழல் வீசப், படர்வெயில் கடிவாரும்.

பொருள் · Meaning in Tamil

அந்தர நெடுவான்மீன் இவண் அலர்குவது என்ன - விண்வெளியாகிய நெடுவானத்து விண்மீன்களின் தொகுதி எல்லாம் சேர்ந்து இங்கு ஒளிவீசுவதுபோல்; மந்தரமணிமாடம் முன்றிலின் வயின் எங்கும் - மந்தரகிரி போன்ற அழகிய மாட வீடுகளின் முன்புறத்தின் இடம் முழுவதிலும்; அந்தம் இல் ஒளிர்முத்தின் அகல்நிரை ஒளிவீச - அளவற்றனவாய், ஒளிரும் தன்மையனவான முத்துக்களின் அகன்ற வரிசை ஒளி வீசா நிற்க (இடப்பட்ட); பந்தரின் நிழல்வீச - (முத்துப்) பந்தரின் நிழல் பரவுதலினால்; படர்வெயில் கடிவாரும் - (எங்கும்) பரவுகிற வெயிலைத் தடுப்பவர்களும் (ஆயினர்).

முத்துக்கள் குளிரும் தன்மையவாதலின், வெயிலுக்குக் குளிர்ச்சி நல்க அவற்றால் பந்தல் இட்டனர் என்பதனால், நகரத்தின் வளமிகுதி உணர்த்தியவாறு. திருமணம் நிகழ்நாள், பங்குனி உத்தர நாள் ஆதலின், வெயிலின் கடுமை நீங்க, வீடுகள்தோறும் பந்தர் இட்டனர்; அதுவும் முத்துப் பந்தர் என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In all the courtyards before the jewelled mansions tall as Mantara,
  2. broad rows of pearls of endless lustre gave off their light,
  3. as if the stars of the high, wide sky had blossomed there;
  4. and some kept off the spreading sun with the shade of pandals.

What the poem says

In front of every mansion people put up pandals, shade canopies, to keep off the sun. These are made of strings of pearls, which glitter as if all the stars of the night sky had come down and bloomed there.

The wedding falls in the month of Paṅkuṉi, in the hot season, so shade was needed. Pearls were thought to be cooling by nature, and roofing the courtyards with them shows how rich the city is. The mansions are compared in height to Mantara, the mountain used to churn the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantara maṇi māṭa muṉṟiliṉvayiṉ eṅkum
antam il oḷi muttiṉ akal nirai oḷi nāṟi,
antara neṭu vāṉ mīṉ avaṇ alarkuvatu eṉṉa,
pantariṉ niḻal vīca, paṭar veyil kaṭivārum.