கம்பராமாயணம் 1277 · பால 21.44

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன்னரும் முனிவரும் வானுளோர்களும் - அரசர்களும் முனிவர்களும் வானத்துத் தேவர்களும், அன்னமென் நடை அணங்கு அனைய மாதரும் துன்னினர் துவன்றலின் - அன்னப் பறவையென மெது நடை நடக்கும் தேவ மகளிரை ஒத்த பெண்டிரும் நெருங்கி நிறைதலால்; அப்பொரு இல் கூடம் சுடர்கள் சூழ்வரும் பொன்மலை ஒத்தது - ஒப்புவமையில்லாத அத் திருமண மண்டபமானது சூரியன் முதலிய எல்லாச் சுடர்களும் சூழ்ந்து வலம் வருகின்ற மேருமலையைப் போன்றதாயிற்று. சுடர்கள் சுற்றி நிற்பதாலும், பொன் மயமாய்ப் பொலிவதாலும் மணமண்டபம் பொன்மயமான மேருமலைக்கு நிகர் ஆயிற்று. மன்னர்கள் முனிவர்கள் சூரியன் ஆயினர்; மாதர்கள் சந்திரன் ஆயினர்; அவர்கள் சூழ இருப்பதால், சூரிய சந்திரர் ஆகிய இரு சுடர்கள் சுற்றிவரு மேருகிரியாயிற்று அத்திருமண மண்டபம் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Kings and sages and the dwellers in heaven,
  2. and women like goddesses with the soft gait of swans,
  3. pressed in and crowded close, so that the matchless hall
  4. was like the golden mountain that the heavenly lights circle.

What the poem says

The hall fills with kings, sages, gods and women as lovely as goddesses walking with a swan's soft step. Packed with radiant people, the golden hall looks like Mount Mēru, the golden mountain at the centre of the world that the sun, moon and stars circle.

The commentary works out the comparison: the kings and sages are the suns and the women are the moons, ranged round the hall as the two great lights circle Mēru.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṉarum, muṉivarum, vāṉuḷōrkaḷum,
aṉṉa meṉ naṭai aṇaṅku aṉaiya mātarum,
tuṉṉiṉar tuvaṉṟaliṉ, cuṭarkaḷ cūḻvarum
poṉ malai ottatu ap poru ilkūṭamē.