கம்பராமாயணம் 1276 · பால 21.43

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனையவன் மண்டபம் அணுகி - அத்தன்மையனாய் வந்த தசரத வேந்தன் மண மண்டபத்தை நெருங்கி; அம்பொனின் புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான் - அழகிய பொன்னினால் செய்து மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில், அவ்வாசனம் அழகு பெறுமாறு ஏறி வீற்றிருந்தான்; முனிவரும் மன்னரும் முறையின் ஏறினார் - முனிவர்களும் அரசர்களும் தத்தம் தகுதிக்கேற்ப இருக்கைகளில் ஏறி அமர்ந்தனர்; சனகனும் தன் கிளை தழுவ ஏறினான் - (பின்பு) சனக மன்னனும் தன் சுற்றத்தார் புடை சூழ ஓர் ஆசனத்தில் ஏறியமர்ந்தான்.

அனைவரும் தத்தமது தகுதிக்கேற்ற முறைப்படியிடப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்தனர் என்பார் “முறையின் ஏறினார்” என்றார். தசரதன் பெருவேந்தன் ஆதலாலும் மணமகனின் தந்தை ஆதலாலும், விருந்தினன் ஆதலாலும், அவன் இருக்கையில் அமர்ந்தபின் சனக மன்னன் தன் இருக்கையில் அமர்ந்தனன். முனிவர்கள் மதித்தற்குரியார் ஆதலானும், அரசர்கள் விருந்தினர் ஆதலாலும், அவர்களும் அமர்ந்த பின்பே சனகன் அமர்ந்தான். ஆதலால், சனகன் அமர்வை இறுதியில் கூறியுள்ளார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That king drew near the hall and appeared on a throne
  2. of fine gold set with gems, so that the throne itself shone;
  3. the sages and the kings took their seats in due order,
  4. and Caṉakaṉ too took his seat, surrounded by his kin.

What the poem says

Everyone takes their seats in the wedding hall. Tacarataṉ sits first, on a golden throne set with jewels; he makes the throne beautiful rather than the other way round. The sages and kings then sit in order of rank.

Caṉakaṉ, the host, sits last of all among his family. Tacarataṉ is the greatest king present, the father of the groom and a guest; the sages deserve honour and the kings are guests too, so courtesy requires the host to wait until all of them are seated.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyavaṉ maṇṭapam aṇuki am poṉiṉ
puṉai maṇi ātaṉam poliyat tōṉṟiṉāṉ
muṉaivarum maṉṉarum muṟaiyiṉ ēṟiṉār
caṉakaṉum taṉ kiḷai taḻuva ēṟiṉāṉ.