கம்பராமாயணம் 1280 · பால 21.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற விராவின; குவிந்தன - பூவுலகம் முதலான எல்லா உலகத்துள்ளோரும் (இத்திருமணத்தைக் காண வேண்டும் எனும் ஆசையின் உந்துதலால்) வந்துகலந்து குவிந்தனர்; விளம்ப வேண்டுமோ? - யாம் இனித் தனித்தனியாக எடுத்தியம்ப வேண்டுமா? (இல்லையாதலால்); அரா அணை துறந்து போந்து - ஆதிசேடன் எனும் பாம்பின் படுக்கையை நீங்கி வந்து; அயோத்தி எய்திய - (மன்பதையைக் காக்க) அயோத்தி நகரில் அவதரித்துள்ள; இராகவன் செய்கையை விளம்புவாம் - இராம பிரானது செய்தியை (இனிக்) கூறத் தொடங்குவோம்.
அரோ - அசை. தராதலம்: பூமியாகிய இடம். தள்ளுறல்: (ஆசையின்) உந்துதல். எல்லா உலகத்தோரும் வந்து குவிதலின், இன்னார் இவ்வுலகினர் என எடுத்தியம்பல் இயலாததாயிற்று என்பார், “உலகு அனைத்தும் விராவின; குவிந்தன” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the worlds, starting with the earth, pushed and pressed in,
- mingled and piled up together: need we tell of it?
- Now we shall tell what was done by Irākavaṉ, who left
- his serpent couch and came to Ayōtti.
What the poem says
Beings from every world, starting with the earth, crowd in to see the wedding, so many and so mixed together that there is no point in listing who came from where.
The poet turns to the bridegroom. Irāmaṉ (Irākavaṉ, of the line of Raghu) is Viṣṇu himself, who left his couch on the serpent Ādiśeṣa in the cosmic ocean to be born in Ayōtti and protect the world. The following verses describe how he got ready for his wedding.