கம்பராமாயணம் 1287 · பால 21.54

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கார் விடக் களம் உடைக் கணிச்சி வானவன்
வார் சடைப் புடையின் ஓர் மதி மிலைச்சத் தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என
வீரபட்டம் அத்து ஒடு திலதம் மின்னவே.

பொருள் · Meaning in Tamil

கார்விடக் கறை உடைக் கணிச்சிவானவன் - கரிய நஞ்சாலான கருநிறத்தைக் கழுத்திலே உடைய மழுவேந்திய சிவபெருமான்; வார்சடைப் புடையின் ஓர் மதி மிலைச்ச - நீண்ட தன் சடையின் மேலிடத்தில், பிறை மதியைச் சூடியருள; தான் சூர்சுடர்க் குலம் எலாம் சூடினான் என - அது கண்டு தெய்வத்தன்மையுள்ள சூரியன், தீ முதலிய சுடர்க் கூட்டங்களையெல்லாம் ஒருங்கே தான் தன்தலைமேலே சூடுவான் போல; வீரபட்டத்தொடு திலகம் மின்னவே - நெற்றியின் மேலே அணியும் வீர பட்டிகையென்னும் அணியையும் திலகம் என்னும் அணியையும் (இராமன் அணிந்தான்.) வீரபட்டம்: வீரர் நெற்றியில் அணியும் பொன் முத்துக்களால் ஆயதோர் அணி. பட்டம் எனவும், வீரபட்டிகை எனவும் இது வழங்கும். “நுதல் அணி ஓடையில் பிறழும் வீர பட்டத்தில்” (கம்ப. 3033) வ் மேலும். திலதம் - சுட்டி. இது வீரபட்டத்திற்கு அருகில் இணைந்திருப்பது. “சுட்டி சேர்வாளார் நுதற்பட்டம்” (ஆதியுலா. 17) எனவும், “நித்திலம் செய் பட்டமும் நெற்றித் திலதமும் ஒத்திலங்க” (பெருந்தொகை. 426) எனவும் வருதல் காண்க. சூரியன், தீ, சந்திரராகிய முச்சுடர்களுள் ஒன்றையே சிவபெருமான் சூடினானாக, இராமன் மற்றையிரண்டு சுடர்களையும் சேர்த்துச் சூடினமை போல வீர பட்டமும் திலதமும் ஒளி சிந்தின என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the god with the axe, whose throat bears the stain of dark poison,
  2. wears one moon at the side of his long matted hair,
  3. as if he himself wore the whole race of divine lights,
  4. the hero's band and the tilakam flashed.

What the poem says

Irāmaṉ puts on the vīrapaṭṭam, the warrior's gold and pearl band worn across the forehead, together with the tilakam, a jewelled pendant attached to it.

The poet makes a playful comparison with Śiva, the god with the axe and the poison-stained throat. Of the three great lights, sun, moon and fire, Śiva wears only one, the crescent moon, in his matted hair. Irāmaṉ, by contrast, seems to wear the whole family of lights at once on his brow: the band and the pendant blaze like the other two.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kār viṭak kaṟaiyuṭaik kaṇicci vāṉavaṉ
vār caṭaip puṭaiyiṉ ōr mati milaiccat tāṉ
cūr cuṭark kulam elām cūṭiṉāṉ eṉa
vīra paṭṭattoṭu tilakam miṉṉavē.