கம்பராமாயணம் 1288 · பால 21.55

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சக்கரம் அத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி
மொய்க் கருங் குழலினாள் முறுவல் உள் உறப்
புக்கன நிறைந்து மேல் பொடித்த போன்ற வே.

பொருள் · Meaning in Tamil

சக்கரத்து அயல்வரும் சங்கம் ஆம் என - (திருமாலின் சுதரிசனம் எனும்) சக்கராயுதத்துக்கு அருகில் ஏந்தியுள்ள பாஞ்சசன்னியம் என்னும் சங்கு இது என்னுமாறு; மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண்கொடி - மிக ஒளிதரும் கழுத்திலே முத்தாலான வெண்மை ஒளி தரும் மாலை வரிசைகள்; மொய்க் கருங்குழலினாள் முறுவல் - அடர்ந்த கருங் கூந்தலையுடையவளான சீதையின் புன்சிரிப்புக்கள்; உள்ளுறப்புக்கன நிறைந்து மேல் பொடிப்ப போன்ற - (இராமன்) மனத்தின் உள்ளே புகுந்து, உள்ளிடம் முழுதும் நிறைந்து உடம்பின் மேலே வெளிப்பட்டன என்னுமாறு தோன்றின. கொடி: வரிசை. முத்தனைய பற்கள் சிறிதே தோன்ற முறுவலிக்கும் பிராட்டியின் புன்னகை இராமன் நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடந்தது என்பதோடமையாது அம்முறுவல் பொங்கி வழியும் அளவு மிக்கும் இருந்தது என, கழுத்தில் அணியும் முத்துமாலை கொண்டு தன் குறிப்பை ஏற்றிக் கூறியவாறு. தரளம்: முத்து. சக்கரம் இராமனது திருமுகத்துக்கும், சங்கு அவன் கழுத்துக்கும் ஒளிபற்றிய உவமைகள் ஆயின. பிராட்டியின் புன் முறுவல் பெருமானின் நெஞ்சம் கொண்ட பெருமை வாய்ந்தது என்பதனை “வாள் நிலா முறுவற் கனிவாய் மதி காணலாவதோர் காலம் உண்டாம் கொல்” (கம்ப. 622) எனவும், “உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்” (கம்ப. 623) எனவும் பிறவிடத்தும் ஓதுவதால் உணரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the conch that lies beside the discus,
  2. the white strands of pearls on his brightly shining neck
  3. looked like the smiles of her with the dense dark hair,
  4. which had entered within him, filled him, and were brimming out.

What the poem says

Irāmaṉ puts on strings of pearls. His neck, white and gleaming beneath his radiant face, is like Viṣṇu's conch held close to his discus.

The poet also sees the pearls as Cītai's smiles: her pearly smile had entered Irāmaṉ's heart and filled it so completely that it is now overflowing and showing on the outside of his body. Earlier he had longed to see that smile again and called it something he could feed on.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cakkarattu ayal varum caṅkam ām eṉa
mikku oḷir kaḻuttu aṇi taraḷa veṇ koṭi
moyk karuṅ kuḻaliṉāḷ muṟuval uḷḷuṟap
pukkaṉa niṟaintu mēl poṭippa pōṉṟavē.