கம்பராமாயணம் 1291 · பால 21.58

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கற்பகம் - கற்பகத் தருவானது; எதிர்வந்து வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி - தன் எதிரில் வந்து விரும்பிக் கேட்பார்க்குக் கொடுக்க மனங் கொண்டு; மாண்ட பொன் மணி அணிவலயம் - சிறந்த பொன்னாலும், மணிகளாலும் ஆகிய வளைகளை; ஈண்டு தன் கொம்பு இடை ஈன்றது ஆம் என - செறிந்த தன் கிளைகளிலே உண்டாக்கி வைத்தாற் போன்று; காண் தகு தடக்கையில் கடகம் மின்ன - காணத்தக்க தன் அழகிய அகன்ற கரங்களில் மின்னும் கடகம் என்னும் அணிகளை (இராமன் அணிந்தான்.)

கற்பகம் இராமனுக்கும், அதன் கொம்புகள் அவன் கரங்களுக்கும் உவமைகள். கலைஞர்களுக்குக் கடகம் இட்டுச் சிறப்பித்தல் இயல்பு. அவ்வாறு சிறப்பிக்க, கற்பகத்தரு, இராமன் கரங்களில் கடகங்களை மாட்டி வைத்திருந்தது என்பதாம். “கற்பகக் கா அன்ன நற்பல தோளார்க்கு” (திருவாய். 6. 6. 6.) எனும் நம்மாழ்வார் கருத்தை அடியொற்றியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the wishing tree, wishing to help those who come and ask,
  2. had brought forth bracelets of fine gold and gems
  3. among its crowded branches,
  4. the bracelets flashed on his broad, lovely arms.

What the poem says

Irāmaṉ puts on bracelets of gold and jewels. He is like the kaṟpakam, the wishing tree of heaven, and his arms are its branches. It is as if the tree had grown these bracelets on its branches, ready to hand to anyone who came and asked.

Bracelets were also the customary reward given to poets and artists, so the image suggests a generous giver. The commentary traces the comparison of the Lord's arms to a grove of wishing trees to Nammāḻvār.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṇṭa poṉ maṇi aṇi valayam vantu etir
vēṇṭiṉarkku utavuvāṉ virumpik kaṟpakam
īṇṭu taṉ kompiṭai īṉṟatu ām eṉa
kāṇtaku taṭak kaiyil kaṭakam miṉṉavē.