கம்பராமாயணம் 1292 · பால 21.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேன் உடை மலர் மகள் - தேனையுடைய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்; திளைக்கும் மார்பினில் - மகிழ்ந்துறையும் (திரு) மார்பில்; தான் இடை விளங்கிய தகையின் ஆரம் தான் - இடையே விளங்குகிற அழகிய (பல்வகை மணிகள் பதித்த) மாலையானது; மீனொடு சுடர்விட விளங்கும் மேகத்து வான் இடு வில் என - விண்மீன்களொடு ஒளிர்கின்ற மேகக் கூட்டத்தில் வான் வில்லும் எழுந்தது போன்று; வயங்கிக் காட்டவே - விளங்கித் தோன்றுமாறு (இராமன் அணிந்தான்).
மார்பு கார் மேகத்திற்கும், மணிமாலையின் பல்வகை மணிகள் விண் மீன்களுக்கும், அவற்றின் ஒளிக்கூட்டம் வான் இடு வில்லிற்கும் உவமைகள் ஆயின. மேகத்தில் விண்மீன்கள் விளங்கித் தோன்றா; இங்குத் தோன்றின என்பதால் இல்பொருள் உவமையணி. தான் - அசைகள். வான் இடுவில்: இந்திரவில். “வானிடு வில்லின் வரவு அறியா வாய்மையால்” (நாலடி.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the chest where the flower-lady of the honeyed lotus delights to stay,
- the lovely necklace that shone in the middle
- gleamed like a rainbow set in the sky
- in a cloud that shines with stars.
What the poem says
Irāmaṉ puts on a necklace set with many kinds of gems. It lies across his chest, where Lakṣmī, the goddess of the lotus, loves to dwell.
His dark chest is a rain cloud, the jewels are stars shining in it, and their many-coloured light is a rainbow. Stars cannot actually be seen through a cloud, so this is a comparison with something that does not exist in nature.