கம்பராமாயணம் 1293 · பால 21.60

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நணுகவும் நிமிரவும் நடக்கும் ஞானத்தர்
உணர்வினின் ஒளி திகழ் உத்தரீயம் தான்
தணிவு அரும் கருணை தன் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்ற ஏ.

பொருள் · Meaning in Tamil

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர் உணர்வு என - (எளிய மக்களால்) அணுகுவதற்கும் அரிய ஞான நடையினைப் பூண்டொழுகும் ஞானிகள் தூய அறிவு போல; ஒளி திகழ் உத்தரீயம் தான் - ஒளிவிடுகின்ற மேலாடையானது; தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய மணி உமிழ் கதிர் என - குறையாது மேன்மேற் பெருகுங்கருணையே வடிவினனான இராமபிரானின் கழுத்திலே சாத்தப்பட்ட மணிகள் சிந்திய ஒளியினைப் போல; மார்பில் தோன்றவே - திருமார்பில் தோன்றுமாறு (இராமன் அணிந்தான்.) ஞானம்: மெய்யுணர்வு. அஃதாவது பிறப்பு, வீடுகளையும் அவற்றின் காரணங்களையும், விபரீத, ஐய அறிவுகளால் அல்லாமல் உண்மையாக அறிதல். இதனையே “தத்துவ ஞானம்” என்பர். (திருக். 36 அதி. முன் பரிமே) மேல், “ஒழிவரு கருணையான்” என அவனிடம் உள்ள கருணையின் நீங்காத் தன்மை கூறினார். இங்கு, “தணிவருங் கருணை” என கொடுக்கக் கொடுக்கக் குறையாத அதன் பூரணத் தன்மை கூறினார். ஞானியர் உணர்வு மாசற்றதாகலின் மாசற்ற உத்தரீயத்திற்கு உவமையாயிற்று. கழுத்தணியின் ஒளி வெள்ளம் மார்பில் பாய்ந்தது போன்றும் இது இலங்கிற்று என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The shining upper cloth, like the understanding
  2. of the wise who walk a path too hard even to approach,
  3. appeared on the chest of him whose compassion never lessens
  4. like the rays poured out by the gems laid on his neck.

What the poem says

Irāmaṉ drapes his upper cloth, the uttarīyam, across his chest. Its spotless white is compared to the pure understanding of sages who walk a spiritual path that ordinary people cannot even come near: true knowledge of birth, liberation and their causes, free from error and doubt.

Lying on his chest below the jewelled necklace, the cloth also looks like the flood of light streaming down from those gems. The commentary notes that his compassion was earlier called 'unending' and is here called 'never lessening': however much it gives, it is never used up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṇukavum ariyatā naṭakkum ñāṉattar
uṇarvu eṉa oḷi tikaḻ uttarīyamtāṉ
taṇivu aruṅ karuṇaiyāṉ kaḻuttil cāttiya
maṇi umiḻ katir eṉa mārpil tōṉṟavē.